மேலும் அறிய

Seetha Raman: சீதா கொடுத்த பதிலடி.. மகாவுக்கு காத்திருக்கும் ஷாக்.. இன்றைய சீதாராமன் சீரியலின் அப்டேட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மக்காவுக்கு சீதா அடுத்தடுத்து பல்பு கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மகா சாப்பிட வர அர்ச்சனாவும் சுபாஷும் சாப்பிட்டு முடித்திருக்க இதை பார்த்து மகா கோபப்பட அர்ச்சனா ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட என்ன இருக்கு மகா? உன் பசிக்கு நீ சாப்பிட போற, எங்க பசிக்கு நாங்க சாப்பிட போறோம். இதுல யார் எப்படி சாப்பிட்டா என்ன என்று சொல்ல சுபாஷ் சூப்பர் சூப்பர் என்று அர்ச்சனாவை பாராட்ட மகா சத்தம் போடுகிறாள்.நான் தனியா உட்கார்ந்து சாப்பிட மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா என்று கேட்க சீதா அங்கு வந்து உட்கார்ந்து உங்களுக்கு கம்பெனி கொடுக்க தான் நான் வந்திருக்கேன் என்று சொல்கிறாள். எனக்கு சரி சமமா உட்கார்ந்து நீ சாப்பிடுவியா என்று மகா கோபப்பட உங்கள மாதிரியெல்லாம் என்னல்லாம் அப்பப்ப மாற முடியாது என பதிலடி கொடுக்கிறாள்.

அன்பு இல்லாமல் இதுவும் செய்ய முடியாது, அதிகாரமும் நிலைக்காது. உங்கள் மேல இருக்கறது அன்பு இல்ல. பயம், பயம்னா பகை என்று அட்வைஸ் கொடுக்க மகா டென்ஷனாகி சாப்பிடாமல் எழுந்து வருகிறாள். பிறகு ஒரு ஹோட்டலுக்கு வர அங்கு பேரராக வேலை செய்பவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அந்த நபர் மகாவின் முன்னாள் காதலன் மகேஷ் என்பது தெரிய வருகிறது.

இருவரும் பழைய நினைவுகளை நினைத்து பார்த்து கண் கலங்குகின்றனர். நீ என்ன இப்படி இங்க இருக்க என்று மகா கேட்க எல்லாம் விதி, இந்த மகாலக்ஷ்மி எங்க வீட்டிற்கு வரல, அதனால் எல்லாம் என்னை விட்டு போய்டுச்சு என்று சொல்ல மகா கண் கலங்குகிறாள். உனக்காக வெளியே வைட் பண்றேன் வா என்று சொல்லி வெளியே வந்து விடுகிறாள்.

அடுத்து வீட்டில் ராமின் தங்கைகள் காபி போட செல்வியை தேடுகின்றனர், மேலும் செல்வியை மரியாதை இல்லாமல் பேச சீதா அதை பார்த்து வயசுக்கு மரியாதை கொடுத்து பேச மாட்டிங்களா என்று திட்டுகிறாள். உங்களுக்கு நான் காபி போட கற்று தரேன் வாங்க என்று இழுத்து செல்ல அர்ச்சனாவும் சுபாஷும் வந்து அவங்க எதுக்கு காபி போடணும், சமைக்க கத்துக்கணும்? அப்படியொரு குடும்பத்துல நாங்க அவங்கள கட்டி கொடுக்க மாட்டோம் என்று டைலாக் பேச பிள்ளைகளை ரொம்ப தப்பா வளக்கறீங்க, இதோடு பின்விளைவுகள் உங்களுக்கு பிறகு புரியும் என பதிலடி கொடுக்கிறாள் சீதா.

அடுத்து மகேஷ் வெளியே வந்ததும் அம்மா அப்பா எப்படி இருக்காங்க? உன் வைப் எப்படி இருக்காங்க? எத்தனை குழந்தைங்க என்றெல்லாம் விசாரிக்க உன்னை மறக்க முடியாமல் குடிச்சு குடிச்சு என் வாழ்க்கையை தொலைச்சிட்டேன். என்னை நினைத்து நினைத்து அப்பா அம்மா மேல போய் சேர்ந்திட்டாங்க. உன்னை என்னால் மறக்க முடியல அதனால் நான் கல்யாணமே பண்ணல என்று அதிர்ச்சி கொடுக்கிறான்,

பிறகு மகா பணத்தை எடுத்து கொடுத்து முதல்ல நல்ல ட்ரெஸ் வாங்கி போடு, நாளைக்கு என் ஆபீஸ் வந்து என்னை பாரு, இந்த மாதிரி பேரர் வேலையெல்லாம் இனிமே வேண்டாம் என்று சொல்லி கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget