மேலும் அறிய

Entertainment Headlines: ஜிகர்தண்டா XX வசூல்.. தளபதி 68 கதை.. கிடா இயக்குநர் வேதனை.. சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines Nov 14: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தீபாவளி விடுமுறையில் சம்பவம் செய்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.. வசூல் நிலவரம் இதுதான்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். மேலும் படிக்க

‘தளபதி 68’ இந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்கா.. டைம் ட்ராவல் செய்யும் விஜய்? குஷியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக கைக்கோர்த்துள்ள திரைப்படம் ‘தளபதி 68’ லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் கைக்கோர்த்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. கலவையான விமர்சனங்களைத் தாண்டி இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளிய நிலையில், படம் முடிந்த சூட்டோடு விஜய் - வெங்கட் பிரபு இணையும் படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும் படிக்க

‘நம்ப முடியவில்லை; ஆனால்...’ - வருமான வரித்துறையை பாராட்டி மாதவன் வெளியிட்ட போஸ்ட்...

தமிழ் சினிமா ரசிகர்களை மேடி மேடி என தன் பின்னால் சுற்ற வைத்த நடிகர் மாதவன் ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக கலைஞராக விளங்குகிறார். அது மட்டுமின்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக தலைவராக சமீபத்தில் நியமிக்கபட்டார் நடிகர் மாதவன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரே எஃப்டிஐஐ நிறுவனத்தின் தலைவராக தொடர்வார். மேலும் படிக்க

‘தாமிரபரணி’ பானு.. முக்தாவுக்கு பிறந்தநாள்.. இப்போ என்ன செஞ்சிட்டு இருக்காங்க தெரியுமா?

"கருப்பான கையால என்ன புடிச்சான்..." இந்தப் பாடலை ஞாபகம் இருக்கா.. அப்ப நிச்சயம் பானுவையும் ஞாபகம் இருக்கும். தாமிரபரணி திரைப்படத்தில் நடிகர் விஷாலின் அத்தை மகளாக பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் முக்தா ஜார்ஜ்.  அனைவராலும் பானு என்றே அறியப்படும் முக்தாவின் 32வது பிறந்தநாள் இன்று. மேலும் படிக்க

“மொத்தமா டிக்கெட் வாங்கறதா சொல்லியும் ஷோ போடல” : கிடா பட இயக்குநர் வேதனை..

நடிகர் காளி வெங்கட் நடிப்பில் வெளியாகியுள்ள “கிடா” படத்துக்கு சரியாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என அப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார்.  ஸ்ரீ ஸ்வரந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கிடா”. இந்த படத்தில் பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் படிக்க

குழந்தைகளை குழந்தையாக இருக்க விடுங்கள்... குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

வருடந்தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் படி  நவம்பர் 20 ஆம் தேதி தான் “உலக குழந்தைகள் தினம்” கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க

விஷ்ணுவுடன் மீண்டும் வெடித்த மோதல்.. கண்கலங்கிய அக்‌ஷயா.. பரபரப்பில் பிக்பாஸ் வீடு!

விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், ஒரு மாதம் நிறைவடைந்த பின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றனர். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget