Bigg Boss 7 Tamil: விஷ்ணுவுடன் மீண்டும் வெடித்த மோதல்.. கண்கலங்கிய அக்ஷயா.. பரபரப்பில் பிக்பாஸ் வீடு!
கடந்த வாரத்தில் போரிங் பெர்ஃபாமர் என்று அக்ஷயா கூறியது விஷ்ணுவுக்கு கடுப்பானது. இதனால் சிறைக்கு சென்ற விஷ்ணு, அக்ஷயாவை விமர்சித்திருந்தார்.
Bigg Boss 7 Tamil: விஷ்ணுவுக்கும் அக்ஷயாவுக்கும் இடையே நடந்த சண்டை தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ்
விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், ஒரு மாதம் நிறைவடைந்த பின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றனர்.
இதில் விஜய் வர்மா, அனன்யா ராவ், பவா செல்லதுரை, வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் உள்ளே உள்ளனர். இதனிடையே இந்த வார கேப்டனாக தினேஷ் காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஷ்ணு - அக்ஷயா மோதல்
இந்நிலையில், விஷ்ணுவுக்கும் அக்ஷயாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர்களுக்கு இரண்டும் பேருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. முதலில், கடந்த 5 வாரங்களுக்கு முன்பு, பேட்டரி டாஸ்க் ஒன்றில் போன் போடை தூக்கி ஓடிச்சென்றபோது, அக்ஷயா தன்னை தள்ளிவிட்டாகக் கூறி, விஷ்ணு அக்ஷயாவை சாடினார்.
தொடர்ந்து வாடி...போடி...என்று பேசிய விஷ்ணு, ஒரு கட்டத்தில் அவரை அடிக்கவும் செய்துவிட்டார். பின்னர், அவரை கண்டிக்க, அக்ஷயாவிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு வார இறுதியில் கமல்ஹாசன் குறும்படம் போட்டதோடு கண்டிக்கவும் செய்தார். இருப்பினும், சக போட்டியாளர்களிடம் கத்துவது, தேவையில்லாத வார்த்தைகளை விடுவது என அனைத்துமே அவரிடம் மிக மிக வைலண்டாக இருந்து வருகிறது.
காஃபியால் வெடித்த பிரச்னை
மேலும், கடந்த வாரத்தில் போரிங் பெர்ஃபாமர் என்று அக்ஷயா கூறியது விஷ்ணுவுக்கு கடுப்பானது. இதனால் சிறைக்கு சென்ற விஷ்ணு, அக்ஷயாவை விமர்சித்திருந்தார். இப்படியான நிலையில் தான், இன்று விஷ்ணுவுக்கும் அக்ஷயாவுக்கும் சண்டை வெடித்துள்ளது. ஒரு கோகோ காஃபியால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அக்ஷயா அதிகாரமாக கேட்டதாகக் கூறி விஷ்ணு அவரிடம் சரமாரியாக சாடியுள்ளார். "காலையில் கண்டன்ட் தேடுறீங்க. இங்கு நீங்க ஷூட்டிக்கு வர மாறி இருங்கீங்க. உங்க ஒருவருக்காக கோகோ காஃபி போட முடியாது. இந்த வாரம் நாமினேஷன்-ல இருக்க அதான் காலையிலையே கண்டண்ட் பண்ணறீங்க” என்று கடுமையாக சாடியிருந்தார் விஷ்ணு.
இதற்கு அக்ஷயா ”வேண்டும் என்றே என்னை டார்கெட் செய்றாங்க. நானும் ரொம்ப பொறுமையா தான் இருக்கேன். எனக்கு கத்தி பேச தெரியாது. நான் எதுவும் கேட்க மாட்டேன். அதுனால என்னை டார்கெட் பண்ணுறாங்க” என்று அழுதபடி பிராவோவிடம் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.