Entertainment Headlines: பவா செல்லதுரை வெளியேற்றம்.. ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் - சினிமா ரவுண்ட் அப்!
Entertainment Headlines Oct 09: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்த பிக்பாஸ் - கண்ணீர் விட்டு அழுத அக்ஷயா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் தொடங்கி ஒளிபரப்பட்டு வருகிறது. வழக்கத்துக்கு மாறாக இரண்டு வீடுகள் கொண்ட இந்த சீசனில் முதல் வாரமே எவிக்ஷன் செய்யப்பட்டு போட்டியாளர்களில் ஒருவரான அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரே வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மேலும் படிக்க
'கடும் மன உளைச்சல்' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பவா செல்லதுரை - ரசிகர்கள் அதிர்ச்சி
முதல் வாரமே ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்ட ஆறு போட்டியாளர்களின் ஒருவராக இருந்த பவா செல்லதுரை தற்போது இரண்டாவது வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனி - பவா செல்லதுரை இடையே எச்சில் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து விசித்திரா - ஜோவிகா இடையே ஏற்பட்ட படிப்பு சம்பந்தப்பட்ட சர்ச்சையில் ஜோவிகாவுக்கு அதரவு தெரிவித்தார் பவா செல்லதுரை. மேலும் படிக்க
நடிகர் ஷாருக்கானுக்கு கொலைமிரட்டல்: Y+ பாதுகாப்பு கொடுத்த மராட்டிய அரசு
தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக நடிகர் ஷாருக்கான் மராட்டிய அரசிடம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து மராட்டிய அரசு அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. பதான், ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
“தெரியாமல் நடந்துவிட்டது” - விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் ஷிவன் - நடந்தது என்ன?
தற்சமயம் இணையதளத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டிகளின் பகுதிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன் ஒருவர் விஜய்யுடனான பிரச்சனைகளின் காரணமாக தான் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வருவதாக கூறியிருந்தார். இந்த பதிவை இயக்குநர் விக்னேஷ் ஷிவன் ஆதரித்து லைக் செய்திருப்பதாக அவர் சான்று காட்டியிருந்தார். மேலும் படிக்க
அன்புமணி ராமதாஸ்க்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் இருந்த காட்சிக்கு பாமக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மேலும் படிக்க