![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vignesh Shivan: “தெரியாமல் நடந்துவிட்டது” - விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் ஷிவன் - நடந்தது என்ன?
கவனக் குறைவாக லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயை விமர்ச்சிக்கும் பதிவிற்கு லைக் போட்டதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷிவன்.
![Vignesh Shivan: “தெரியாமல் நடந்துவிட்டது” - விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் ஷிவன் - நடந்தது என்ன? director vignesh shivan apologises to vijay fans for misunderstanding of lokesh kanagaraj interview Vignesh Shivan: “தெரியாமல் நடந்துவிட்டது” - விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் ஷிவன் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/cec87751abd6f876db337c933395fca21696802682323572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்க்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன்கள் காலதாமதமாகியது இந்த வதந்திகளுக்கு வலுசேர்த்தன. தற்போது லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன்களில் தானும் விஜயும் இந்த வதந்திகளை சேர்ந்து படித்து சிரித்ததாக தெரிவித்து இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். ஆனால் இந்த வதந்திகள் பல விதமான பிரச்சனைகளை இணையதளத்தில் கிளப்பியுள்ளன.
லோகேஷை விமர்சித்த ட்விட்டர் பதிவு
தற்சமயம் இணையதளத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டிகளின் பகுதிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன் ஒருவர் விஜயுடனான பிரச்சனைகளின் காரணமாக தான் லோகேஷ் கனகராஜ் விஜயின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வருவதாக கூறியிருந்தார். இந்த பதிவை இயக்குநர் விக்னேஷ் ஷிவன் ஆதரித்து லைக் செய்திருப்பதாக அவர் சான்று காட்டியிருந்தார்.
விக்னேஷ் ஷிவன் போட்ட லைக்
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் விக்னேஷ் ஷிவன் விஜய் எதிர்ப்பாளர் என்று அவரை விமர்சித்தனர். மேலும் அஜித் குமாரை வைத்து விக்னேஷ் ஷிவன் படம் இயக்க இருந்ததும் அவர்கள் விமர்சித்ததற்கு ஒரு காரணமாக அமைந்தது.
விளக்கமளித்த விக்னேஷ் ஷிவன்
இந்த விமர்சனங்களை கவனித்த விக்னேஷ் ஷிவன் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு விளக்கமளித்து மன்னிப்பும் கேட்டுள்ளார். அதில் “அன்பிற்குரிய விஜய் மற்றும் லோகி ரசிகர்களே குழப்பத்திற்கு மன்னிக்கவும். வீடியோவின் உள்ளடக்கம், ட்வீட்டின் கருத்து எதையும் படிக்காமல் லோகேஷ் கனகராஜின் முகத்தைப் பார்த்ததும் லைக் கொடுத்துவிட்டேன். ஏனென்றால் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கும் அவருடைய பேச்சிற்கும் நான் மிகப்பெரிய ரசிகன். தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தை பார்ப்பதற்கு நான் ஆர்வமாக காத்திருக்கிறேன். அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜின் முகத்தைப் பார்த்ததும் தனிச்சையாக லைக் அழுத்திவிட்டேன். அதே போல் தான் நயன்தாரா நடித்து எனக்கு மிகப் பிடித்த காட்சி ஒன்றைப் பார்த்த வீடியோவை லைக் கொடுத்துவிட்டேன். இரண்டு சூழலிலும் வீடியோவின் உள்ளடக்கத்தை நான் பார்க்கவில்லை. நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய அசட்டுத்தனத்தினால் ஏற்பட்ட ஒரு தவறுதான். இதற்காக உலகளவில் இருக்கும் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் எல்லாரையும் போலவே அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படத்தைப் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன். இதனால் இந்த அசட்டுத்தனமான வீடியோவில் கமெண்ட் செய்து நேரத்தை வீணாக்காமல் இவ்வளவு உழைப்பு போட்டு உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை கொண்டாடுங்கள்“ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பிறகு விஜய் ரசிகர்கள் சமாதானமடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)