Bigg Boss 7 Tamil: 'கடும் மன உளைச்சல்' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பவா செல்லதுரை - ரசிகர்கள் அதிர்ச்சி
Bigg Boss 7 Tamil : மன உளைச்சல் மற்றும் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரம் அக்டோபர் 1ம் கோலாகலமாக விஜய் டிவியில் தொடங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. முதல் நாள் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார்கள். அவர்களின் ஒருவர் தான் சிறந்த எழுத்தாளரும், நடிகரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரை.
விமர்சனங்களை சந்தித்த பவா :
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போதே ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பலரும் அவர் தேவையில்லாமல் ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று தன்னுடைய பெயரை கெடுத்து கொள்ள வேண்டும் என்பது போல எல்லாம் சில பேச்சுக்கள் அடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த பிறகு மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தார் பவா செல்லதுரை.
சர்ச்சையில் சிக்கிய எச்சில் விவகாரம் :
முதல் வாரமே ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்ட ஆறு போட்டியாளர்களின் ஒருவராக இருந்த பாவ செல்லதுரை தற்போது இரண்டாவது வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனி - பவா செல்லதுரை இடையே எச்சில் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து விசித்திரா - ஜோவிகா இடையே ஏற்பட்ட படிப்பு சம்பந்தப்பட்ட சர்ச்சையில் ஜோவிகாவுக்கு அதரவு தெரிவித்தார் பவா செல்லதுரை.
சரவணன் என்ன சொன்னார் ?
ஒரு வாரம் முடிந்த நிலையில் நேற்று ஒரு ட்விஸ்டுடன் அனன்யா வெளியேற்றபட்டார். அதை தொடர்ந்து இந்த வார கேப்டனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சரவணா விக்ரம் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஹவுஸ் மேட்ஸ் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என கூறப்பட்டதால் அப்போது பவா செல்லதுரையை சோம்பேறி என சரவணா விக்ரம் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்து பிக் பாஸிடம் பேசியுள்ளார்.
பிக் பாஸுடன் பேச்சுவார்த்தை :
பிக் பாஸ் வீட்டுக்குள் சில டாஸ்கள் என்னால் செய்யமுடியாது என்பது எனக்கு முன்னரே தெரியும். அதை பற்றி நன்கு தெரிந்து தான் வீட்டுக்குள் வந்தேன். ஆனால் இங்கே மற்றவர்களை கீழ்மை படுத்துவது, வன்மத்துடன் பழகுவது என சில விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு ஹவுஸ்மேட்ஸ் உடன் பர்சனலாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய உடல் அளவிலும் மனதளவிலும் சற்று பாதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அதனால் என்னை இங்கிருந்து உடனே அனுப்பி விடுங்கள் என பிக் பாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பவா செல்லதுரை ரெக்வஸ்ட் :
பிக் பாஸ் கொஞ்சம் யோசியுங்கள், மருத்துவர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன் என சொல்லி கன்வின்ஸ் செய்ய முயற்சித்தாலும் பவா செல்லதுரை சமாதானமாகவில்லை. பிக் பாஸ் இன்று ஒரு நாள் இரவு மட்டும் இருங்கள் சில ப்ராசஸ் உள்ளன. அதை முடிவு செய்துவிட்டு காலை சொல்கிறேன் என கூறியுள்ளார். இன்று ஒரு நாள் நயிட் மட்டும் நான் பிக் பாஸ் வீட்டில் தூங்கி கொள்கிறேன் என ரெக்வஸ்ட் வைத்துள்ளார் பவா செல்லதுரை.
Bava Chelladurai walks out of the show.#BiggBossTamil7 pic.twitter.com/FmVG8sdHM4
— Bigg Boss Follower (@BBFollower7) October 9, 2023
வெளியேறிய போட்டியாளர் :
அதன்படி அடுத்த நாள் காலை பவா செல்லதுரையை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்க பிக் பாஸ் சம்மதம் கொடுத்துள்ளார். உடல் ஒத்துழைக்கவில்லை என கூறியதால் மட்டுமே உங்களை அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார் பிக் பாஸ். கன்பெஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேறினார் பவா செல்லதுரை. ஹவுஸ் மேட்ஸ்களிடம் நானே சொல்லி கொள்கிறேன் என பிக் பாஸ் சொல்லிவிட்டார். அதனால் 9ம் நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை.