என்கூட ஹீரோயினா நடிக்க யாரும் வரல...லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே படத்தில் தன்னுடன் நடிக்க பல நடிகைகள் நடிக்க தயங்கினார்கள் என டிராகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்

டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டிராகன்.கே. எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் டிராகன் படம் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. டிராகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ள வீடியோ பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
யாரும் நடிக்க வரல
" லவ் டுடே படத்திற்கு ஹீர்யோயின் பார்க்கும்போது எல்லாரும் என் கூட நடிக்க தயங்கினாங்க..கோமாளி டைரக்டர் என்றதும் சார்னு சொல்லுவாங்க கதைகேட்டுவிட்டு நல்லா இருக்கு யார் ஹீரோ என்று கேட்பார்கள். நான் தான் என்றதும் என்ன தேதி சொன்னீங்கனு கேட்பார்கள். கொஞ்சம் டேட்ஸ் மட்டும் பார்த்து சொல்லட்டா என்று கேட்பார்கள்.
#PradeepRanganathan on #Dragon Promotional Event Says !
— Kerala Box Office (@KeralaBxOffce) February 14, 2025
When I approached actresses for the film #Lovetoday where I was playing the lead, most indirectly declined, while some honestly admitted they preferred working with big stars. ✌️pic.twitter.com/qGqdvXLfSF
இன்னும் சிலர் நிறைய நடிக்க வேண்டிய படமாக இருக்கிறது. எனக்கு செட் ஆகாது என்று சொல்வார்கள். நான் பெரிய நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்ன நடிகைகளுக்கு நன்றி. அப்படி இருந்த எனக்கு இன்று டிராகன் படத்தின் அனுபமா பரமேஸ்வரன் உடன் நடிப்பது ரொம்ப சந்தோஷன். பிரேமப் படம் வெளியான போது நான் காலேஜில் படித்துக் கொண்டு இருந்தேன் அப்போலாம் அனுபமாவுடன் நான் நடிப்பேன் என்று கற்பனையில் கூட நினைத்து பார்த்திருப்பேன்" என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்

