"ஸ்வராஜ்" புதிய தொடர் டிடி பொதிகையில் ஆரம்பம் - விடுதலை போராட்ட வீரர்களுக்கு காணிக்கை!
75 Years of Independence : நாம் அறியாத பல விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு "ஸ்வராஜ் " என்ற தலைப்பில் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 75 வாரங்களுக்கு ஒளிபரப்பாக உள்ளது.
Doordarshan Podhigai : அறியப்படாத விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறு தொடராகிறது...பொதிகை தொலைக்காட்சி முன்னேற்பாடு
நமது இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நமது சுதந்திரத்திற்காக பல போராட்ட வீரர்கள் பாடுபட்டனர். அதில் சிலரை பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் பல விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி இது வரையில் அறிந்ததில்லை. அவர்களின் வரலாற்றை முழுமையமாக நாம் அறிக்கொள்வதற்காக தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி "ஸ்வராஜ்" என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சி தொடரை 75 வாரங்களுக்கு ஒளிபரப்ப உள்ளது.
ஸ்வராஜ் நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரங்கள்:
இந்த "ஸ்வராஜ்" நிகழ்ச்சி ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 75 வாரங்களுக்கு தூதர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு HD தொழில்நுட்பத்தில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் மறுஒளிபரப்பு திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு :
இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடைபெற்றது. இதில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, சென்னை பொதிகை தொலைக்காட்சியின் தலைவர் கிருஷ்ணதாஸ், செய்தி பிரிவின் இயக்குனர் குருபாபு பலராமன், நிகழ்ச்சி பிரிவின் தலைவர் ரஃபீக் பாட்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
75 வாரங்கள் ஒளிபரப்பாகும் :
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை பேசுகையில், நாடு முழுவதிலும் இருக்கும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஆனால் அறியப்படாத 75 போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை 75 வாரங்களுக்கு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பப்படும்.
தூதர்ஷனின் யூடியூப் தளம் :
மேலும் தமிழகத்தை சேர்ந்த வேலுநாச்சியார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீரர்களின் வரலாறும் இந்த தொடர்களில் இடம்பெரும். மேலும் விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்த ஒரு தனிப்பட்ட தொடரும் விரைவில் வெளியகும் என்று கூறினார் ரஃபீக் பாட்ஷா. 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதின் கொண்டாட்டமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது பொதிகை தொலைக்காட்சி என்றார் செய்தி பிரிவின் இயக்குனர் குருபாபு. வரலாற்று சிறப்புகள் குறித்த நிகழ்ச்சிகளை தூதர்ஷனின் யூடியூப் தளத்தில் காணலாம் என்றார்.
தபால் தலை வெளியீடு :
சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றின வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளான ஆகஸ்ட் 20ம் தேதி அவரது தபால் தலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட தெலுங்கானா ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரியின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தராஜன் பெற்று கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணைஅமைச்சர் தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தால் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணைஅமைச்சர் டாக்டர் எல். முருகன். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விடுதலை வீரர்கள் குறித்த 10 நாட்கள் கண்காட்சி ஒன்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பாக பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.