மேலும் அறிய

அதிக திருமணம் செய்து கொண்ட நடிகர் - நடிகைகள் யார் யார் தெரியுமா?

90களில் பிறந்தவர்களுக்கு ஒரு திருமணம் நடப்பதே பெரிய விஷயமாக இருக்கும் போது, சில பிரபலங்கள் 3 முறை திருமணம் செய்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டங்களில் திருமணம் என்பது எளிதான ஒன்றாக அமைந்துவிட்டது. ஆனால்,1990 ஆம் ஆண்டுகளில் பிறந்த 90ஸ் கிட்ஸூகளுக்கு திருமணம் கனவு மாதிரியாகிவிட்டது. கனவில் கூட திருமணம் நடக்கவில்லை என்று புலம்பும் நிலைக்கு 90ஸ் கிட்ஸுகள் வந்துவிட்டனர். அப்படியிருக்கும் போது சினிமாவில் சில நடிகர், நடிகைகள் எல்லாம் 3 முறை திருமணம் செய்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கமல் ஹாசன்:

ஆனால், அதுதான் உண்மை. சினிமாவில் இப்போது விவாகரத்து செய்தி அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் ஒரு காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை சினிமா பிரபலங்கள் செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது உலக நாயகன் கமல் ஹாசன் தான். கடந்த 1978 ஆம் ஆண்டு பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். அவருடன் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு சாரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.



அதிக திருமணம் செய்து கொண்ட நடிகர் - நடிகைகள் யார் யார் தெரியுமா?

கமல் ஹாசன் மற்றும் சாரிகாவிற்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன். நீண்ட நாட்களுக்கு பிறகு சாரிகாவையும் விவாகரத்து செய்த கமல் ஹாசன் நடிகை கௌதமியுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். கடைசியாக அவரிடமிருந்து பிரிந்து இப்போது இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

ராதிகா:

கமல் ஹாசன் மட்டுமின்றி ராதிகாவும் 3 முறை திருமணம் செய்துகொண்டார். முதலில் கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாக இருவரும் பிரிந்து சென்றனர். அதன் பிறகு இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஹார்டியை திருமணம் செய்து கொண்டார். ரிச்சர்டு ஹார்டி மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அதன் பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் பல படங்களில் நடித்த சரத்குமாரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் ராதிகாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வனிதா:

அதிக திருமணம் செய்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருப்பவர் வனிதா. ஏற்கனவே ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த கொண்ட நிலையில், அவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் மற்றும் ஜோவிதா என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு ராஜனை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ராஜன் தம்பதியினருக்கு ஜெயனிகா என்று மகள் உள்ளார். அதன் பிறகு தான் 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்தார். 


அதிக திருமணம் செய்து கொண்ட நடிகர் - நடிகைகள் யார் யார் தெரியுமா?

பவன் கல்யாண்:

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமா நடிகரான பவன் கல்யாணும் 3 திருமணம் செய்து கொண்டார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து ரேணு தேசாயை காதலித்து கரம் பிடித்தார்.  ரேணு தேசாய் மற்றும் பவன் கல்யாண் தம்பதியினருக்கு அகிரா, நந்தன், ஆதிய என்று குழந்தைகள் உள்ளனர் . இதையடுத்து ரேணு தேசாயையும் விவாகரத்து செய்துவிட்டு நடிகையும், டான்ஸ் இயக்குநருமான அன்னா லெஷ்னோவாவை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நரேஷ்:

இவர்களது வரிசையில் அடுத்ததாக இருப்பவர் நடிகர் நரேஷ். முதலில் ஒளிப்பதிவாளர் மகளை திருமணம் செய்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட 2ஆவதாக ரேகா சுப்ரியாவை திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 3ஆவதாக ரம்யா ரகுபதியை திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்து நடிகை பவித்ரா லோகேஷை 4ஆவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget