OTT Release: மத்தகம், லேபிள் வரிசையில் புதிய ஹாட்ஸ்டார் சீரிஸ்: டாக்டர்கள் பற்றிய ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Heart Beat Series: மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, ஜாலியான பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் 'ஹார்ட் பீட்' (Heart Beat) சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, ஜாலியான பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை சூழல், மருத்துவர்கள் வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி அனைத்து வித உணர்ச்சிகளும் கலந்த ஜாலியான சீரிஸாக இந்த சீரிஸ் அமைந்திருக்கும்.
ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்கும் வகையில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ரீனா இந்த நான்கு உலகங்களையும் ஒவ்வொன்றாக விளக்குகிறாள். அதில் இறுதி உலகம் அவளுடைய காதல் வாழ்க்கையைப் பற்றியது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முந்தைய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்களான ‘மத்தகம்’ மற்றும் ‘லேபிள்’ சீரிஸ்கள் மக்களிடையே பரவலாக கவனமீர்த்து வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான இந்த “ஹார்ட் பீட்” சீரிஸுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.
முன்னதாக இந்த சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடல் வெளியாகி கவனமீர்த்தது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் கதையை விளக்கும் வகையில் அமைந்து கவனமீர்த்தது.
A Tele Factory நிறுவனம் இந்தத் சீரிஸை தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜூன் எடிட்டிங் பணிகளை செய்கிறார். சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
மேலும் படிக்க: Madurai Muthu: ”ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..” அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து
Vijay: இன்னும் ஒரு படம் நடிங்க.. அப்புறம் அரசியல் பண்ணலாம் - விஜய்க்கு அறிவுரை சொன்ன சீமான்!