எம்ஜிஆர் மாதிரி இருக்கணும்...! விஜய்க்கு அறிவுரை சொன்ன இயக்குநர் விக்ரமன்
காஷ்மீரில் நினைத்தது யாரோ என்ற படப்பிடிப்புக்காக தான் சென்ற போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் விஜய் பற்றி பேசியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் விக்ரமன்.
காஷ்மீரில் நினைத்தது யாரோ என்ற படப்பிடிப்புக்காக தான் சென்ற போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் விஜய் பற்றி பேசியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் விக்ரமன்.
நடிகர் விஜய்க்கு முதல் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த இயக்குநர் என்று விக்ரமனை சொன்னாலும் அது மிகையாகாது. 1996 பிப்ரவரியில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக. இத்திரைப்படத்தில் விஜய், சங்கீதா, அஞ்சு நடித்திருப்பார்கள். அந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை வெற்றியை அள்ளித் தந்தது. விஜய்யை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். திரும்பிய பக்கமெல்லாம் ஆனந்தம் ஆனந்தம் என்று முழங்கத் தொடங்கியது. விஜய்யை உருவாக்கிய பெருமைக்குரிய விக்ரமன், விஜய்யை பற்றி நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் விக்ரமன் பேசியிருப்பதாவது: நினைத்தது யாரோ என்ற படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அது காஷ்மீரின் இன்டீரியர் பகுதி. அப்போது தூரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஓடிவந்து சூட்டிங்கா என்ன மொழி என்று இந்தியில் கேட்டார். நான் தமிழ் என்றேன். விஜய் ஹீரோ? என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே இந்தி தெரிந்த ஒருவரைக் கூப்பிட்டு விஜய் எப்படி தெரியும், ஏன் பிடிக்கும் என்று கேட்கச் சொன்னேன். அவரும் கேட்டுவிட்டு, அந்த இளைஞர் சில நாட்கள் சென்னையில் ஸ்வெட்டர் விற்றாராம். அப்போது விஜய் படங்களை விரும்பிப் பார்த்துள்ளார். அதிலிருந்து விஜய்யைப் பிடிக்கும் எனக் கூறுகிறார் என்றார். விஜய்க்கு எப்பவுமே மாஸ் இருக்கு. விஜய் ஆரம்ப நாளில் இருந்த சின்சரிட்டியை இப்போதும் கொண்டுள்ளார். முதல் படத்தை கன்னியாகுமரியில் சூட் செய்தேன். அப்போது ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வந்துவிடுவார். நானும் அவருடன் போட்டிப்போட்டு பார்த்தேன். ஆனால் அவர் தான் என்றும் முதலில் வருவார். அந்த டெடிகேஷன் அவருக்கு இன்றும் இருக்கிறது.
என்ன விஜய் ஆரம்ப நாட்களில் ஃபேன் எங்கேஜ்மென்ட்டில் ரொம்பவே ரிசர்வ்டாக இருப்பார். அவரைப் பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் விஜய், விஜய் எனக் கத்துவார்கள். ஆனால் அவர் தயக்கத்துடனேயே கையசைப்பார்.
அப்போது ஒரு நாள் நான் விஜய்யிடம் சொன்னேன்.. ரசிகர்களை அரவணைக்கும் விஷயத்தில் எம்ஜிஆர் மாதிரி இருக்கணும் என்றேன். அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார். எம்ஜிஆர் தனது கடைசி காலம் வரை வாத்தியாரே என்றொரு குரல் வந்துவிட்டால் உடனே அந்தப் பக்கம் திரும்பி புன்னகையுடன் கைகூப்புவார். அவரைப் போல் இருக்க வேண்டும். அவரைப் போல் ரசிகர்களை மதிக்க வேண்டும் என்று சொன்னேன். இன்றைக்கு விஜய் அந்த விஷயத்தில் நிறைய வளர்ந்துவிட்டார்.
இவ்வாறு விஜய் பற்றி இயக்குநர் விக்ரமன் பேசியுள்ளார்.