மீம்ஸ் எல்லாம் நல்லா இருக்கு ஆனா தேவையில்லாதது...வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்னேஷ் சிவன்
புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை விலை பேசியதாக வெளியான தகவல் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்
விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா தனுஷ் பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பற்றி தகவல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் பரவி வந்தது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விக்னேஷ் சிவன் சொந்தமாக வாங்க விலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுன. இதற்காக அவர் சுற்றுலாத் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை சந்தித்து பேசியதாகவும் ஆனால் சீகல்ஸ் ஹோட்டல் அரசுக்கு சொந்தமான கட்டிடம் என்றும் அதை விற்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகின. விலைக்கு வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஹோட்டலை லீஸூக்கு எடுக்க முடியுமா என்று விக்னேஷ் சிவன் கேட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலை அடிப்படையாக வைத்து சமூக வலைதளங்களில் பரவலாக மீம்கள் ஷேர் செய்யப்பட்டன. தற்போது இதுகுறித்து விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் விளக்கம்
" என்னைப் பற்றிய சில்லியான ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. புதுச்சேரி விமான நிலைய தற்போது நான் இயக்கி வரும் லவ் இன்ஸூரன்ஸ் கம்பேனி படபிடிப்பிற்கு அனுமதி கேட்க சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரை பார்க்க நேரிட்டது. அப்போது அங்கு வந்திருந்த லோக்கல் மேனேஜர் தன்னுடைய தனிப்பட்ட விஷயமாக பேசியதை என்னுடன் தொடர்பு படுத்தி பலர் சம்பந்தபடுத்தி விட்டார்கள்.என்னை வைத்து வந்த மீம்ஸ் , பகடி எல்லாம் நன்றாக இருந்தன ஆனால் அவை தேவையில்லாதவை. அதனால் இந்த விஷயத்தை நான் தெளிவுபடுத்த நினைத்தேன்" என விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.
Filmmaker #VigneshShivan rubbishes reports that claimed he was trying to acquire a government property in Pondicherry.
— Cinemania (@CinemaniaIndia) December 15, 2024
“I had gone to Pondicherry to see the airport to get shooting permission for my film #LoveInsuranceKompany (#LIK).” pic.twitter.com/JwiXlVdZom
மேலும் படிக்க : SK 25 : 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் புறநாநூறு..எஸ்.கே சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..கங்குவா பத்தி ஏன் பேசனும்?" சூடான் விஜய் சேதுபதி