மேலும் அறிய

Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜனவரி 6ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்

அரசு ஊழியர்கள் தான் அரசு அறிவிக்கும் திட்டங்களை கடை நிலையில் உள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முக்கிய பாலமாக உள்ளனர். எனவே என்ன தான் புதிய புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டாலும் மக்களை சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த அரசு ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிவித்தாலும், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அரசு ஊழியர்களை சமாதானம் செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கியமானது கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய சரண் விடுப்பு தொடர்பான அறிவிப்பாகும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

மேலும் திருமண உதவி தொகை, மருத்துவ காப்பீடு, முன் பண உதவி என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது, அதே நேரம் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன் படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்கு ஏற்ப அரசு ஊழியர்கள் சங்கம், நிதித்துறை அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு கடந்த ஆக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இருந்த போதும் தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து ஜனவரி 6ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது அரசு ஊழியர்கள் சங்கம். இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ..வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் கொண்ட அமைச்சர்கள் குழு அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையை எட்டியது. எனவே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஓய்வூதியம் தொடர்பாக இறுதி அறிக்கையை ககன் தீப்சிங் பேடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பித்தார்.

ஜனவரி 6ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

இதனையடுத்து அந்த அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களில் எந்த திட்டம் சிறந்தது, அரசு ஊழியர்களுக்கு எந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு ஆலோசித்து முடிவெடுக்கும் வகையில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரை - அமைச்சரவை ஒப்புதல்.?

மேலும் அன்றைய தினமே அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி கூடவுள்ள நிலையில், புதிய அறிவிப்புகள், ஆளுநர் உரைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் உள்ளிட்டவைகைள குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget