SK 25 : 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் புறநாநூறு..எஸ்.கே சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , ஜெயம் ரவி , அதர்வா நடிக்கும் புறநாநூறு படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்

புறநாநூறு
அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயனின் மார்கெட் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகியது. சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புறநாநூறு படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவி , அதர்வா , இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவருடைய நூறாவது படம் என்பது குறிப்பிடத் தக்கது.
புறநாநூறு படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம்
சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் 30 கோடி வரை சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரன் படத்தின் வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயனின் சம்பளம் மற்றும் அவரது படங்களின் பட்ஜெட் இரண்டு பெரியளவில் அதிகரித்துள்ளது.
சுதா கொங்காரா இயக்கும் புறநாநூறு படம் சுமார் ரூ 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் சிவகார்த்திகேயன் , அதர்வா , ஜெயம் ரவி உள்ளிட்ட மேலும் பல பெரிய நட்சத்திரங்கள் இணைய இருக்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் உட்பட மற்ற நடிகர்களும் குறைந்தபட்ச அட்வான்ஸ் மட்டும் பெற்றுள்ளதாகவும் படத்தின் வெற்றிபெற்றால் அதில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் நுட்பரீதியாக படத்தை நேர்த்தியாக எடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு இந்த ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
#SK25 said to be made in a Massive budget of 150Crs for Production cost itself 🥶❤️🔥#Sivakartikeyan, #Jayamravi & Dir #SudhaKongara have agreed for revenue share basis with minimum initial salary to support the production cost & Quality👏
— AmuthaBharathi (@CinemaWithAB) December 15, 2024
A MAGNUM OPUS from Kollywood 🎯 pic.twitter.com/2XSBvSdStG
மேலும் படிக்க : Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..கங்குவா பத்தி ஏன் பேசனும்?" சூடான் விஜய் சேதுபதி
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்

