Behind The Song: பிரஷாந்தை கிளாமராக காட்டிய சுந்தர் சி.. “எந்தன் உயிர் தோழியே” பாடல் உருவான கதை!
கடந்த 2003 ஆம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வின்னர் படம் வெளியானது. சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கிரண், வடிவேலு, ரியாஸ் கான், நம்பியார், எம்.என்.ராஜன், நிரோஷா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர்.
வின்னர் படத்தின் கிளைமேக்ஸில் “எந்தன் உயிர் தோழியே” பாடம் வரும். அந்த பாடல் உருவான விதத்தை பற்றி இயக்குநர் சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வின்னர் படம் வெளியானது. சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கிரண், வடிவேலு, ரியாஸ் கான், நம்பியார், எம்.என்.ராஜன், நிரோஷா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வடிவேலுவின் கட்டதுரை காமெடி எவர்க்ரீன் ஹிட்டானது. இந்த படம் உருவான விதம் பற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுந்தர் சி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
இப்படத்தில் ”எந்தன் உயிர் தோழியே” பாடலை பா.விஜய் எழுத உதித் நாராயணன் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த பாடல் உருவானதை சுந்தர் சி பகிர்ந்திருந்தார். அதனைக் காணலாம்.
அதில் பேசிய சுந்தர் சி., “வின்னர் படத்தில் பிரசாந்தை நான் ஐட்டம் பாய் ஆக மாற்றி விட்டேன் என சொல்லலாம். கிளைமேக்ஸில் “எந்தன் உயிர் தோழியே” பாடம் வரும். அப்போதெல்லாம் பார்த்தால் கிளைமேக்ஸ் போர்ஷனில் வரும் பாடல்கள் எல்லாம் அதிரடியாக இருக்கும். அப்படிப்போடு, மன்மதராசா, ஓ போடு என பாடல்கள் வேகமாக இருக்கும். ஆனால் இந்த பாடலை யுவன் இசையமைக்கும்போது எனக்கு இந்த பாட்டு ஓகே என சொன்னேன். அவர் இது முதல் ரீலில் வரக்கூடியதாக இருக்கிறது. கிளைமேக்ஸில் இதை போட்டால் நிற்காது என சொன்னார்.
இந்த பாடலை முதலில் கரீபியன் தீவில் ஷூட்டிங் செய்யலாம் என நினைத்தோம். அதை சொல்லி இந்த பாடலில் ஒருத்தர் கூட இருக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள் பாருங்க என யுவனிடம் கெத்தாக சொல்லி விட்டேன். அப்புறம் தான் அந்த பாடலை உருவாக்கினோம். வின்னர் படத்தின் தயாரிப்பாளர்கள் மாறிய நிலையில் கரிபீயன் தீவில் இருந்து மொரிஷியஸ் தீவுக்கு லோகேஷன் மாறியது.
தொடர்ந்து மாலத்தீவு, கோவா, கேரளா என மாறி மாறி கடைசியாக மகாபலிபுரம் பக்கத்துல ஒரே ஒரு நாள் ஷூட்டிங் பண்ணுங்க என சொல்லி விட்டார்கள். இப்ப எனக்கு யுவன் தான் நியாபகம் வருகிறார். ஒருத்தர் தியேட்டரை விட்டு எந்திரிக்க மாட்டேன்னு நான் சொன்னதை யோசிச்சு பார்த்தேன்.
இந்த பாட்டு தப்பிக்க ஒரே வழி கிளாமர் தான். கிரண் மட்டுமல்ல பிரஷாந்த் நீங்களும் சட்டை பட்டனை எல்லாம் கழட்டி போட்டு கொஞ்சம் கிளாமர் காட்டுங்க என நான் சொன்னேன்” என தெரிவித்திருந்தார்.