மேலும் அறிய

TVK Vijay: த்ரிஷா விஷயத்தில் விஜயை விமர்சித்தது ஏன்? - சமுத்திரகனி விளக்கம்!

த்ரிஷா விவகாரத்தில் விஜயைப் பற்றி நான் பேசிய வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும். அந்த வீடியோவை எடுத்த தம்பி முன்னுரையை எடுக்கவில்லை, முடிவுரையை தான் எடுத்தான் என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை விமர்சித்தது என்னுடைய வேதனையின் வெளிப்பாடு என நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். 

த்ரிஷாவுடன் வந்த விஜய்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி நல்ல வரவேற்பை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. 

பெயரை குறிப்பிடாவிட்டாலும் அந்த நடிகை த்ரிஷா தான் என பலரும் தெரிவித்திருந்தனர். இந்த சர்ச்சை வெடித்த மறுநாளே திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவுடன் விஜய் பங்கேற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டை மறுக்கிறாரா அல்லது உண்மையை ஒப்புக்கொள்கிறாரா என தெரியாமல் தவெக தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். 

விஜயை விமர்சித்த சமுத்திரகனி

விஜயுடன் த்ரிஷா ஒன்றாக வந்ததற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குநர் சமுத்திரகனி, டெக்ஸ்லா பட பூஜையின்போது, இயக்குநர் பாலா மற்றும் ஆர்.வி.உதயகுமாரிடம் விஜய் விவகாரம் குறித்து பேசினார். அப்போது, இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. நீ அவங்களை வெளியே கூட்டிக்கொண்டு போற, நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைக்க வேண்டியது தானே. அப்ப நீ யாரை பழிவாங்குற, எல்லாம் நல்லா போய்க்கொண்டு இருந்தது. இனிமேல் நம்மால முட்டுக்கொடுக்க முடியாது என தொண்டனே கூறுகிறான்’ என சொல்லும் வீடியோ வைரலானது. 

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமுத்திரகனி அதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்லார். அதில், “அந்த வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும். அந்த வீடியோவை எடுத்த தம்பி முன்னுரையை எடுக்கவில்லை, முடிவுரையை தான் எடுத்தான். அந்த தம்பி போனை தூக்கி விட்டார் என சொல்லி நாம் பேசுவதை உடனே நிறுத்தி விட முடியாது. அதனால்   நான் பேச வேண்டியதை பேசி முடித்தேன்.

அந்த வீடியோவை எடுத்ததில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம் அவ்வளவு தான். பிரபலங்கள் ரொம்ப உஷாராக ஒரு விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார்கள். சாப்பிட மட்டும் வாயை திறக்க வேண்டும் என்ற நிலை தான் இருக்கிறது. நான் மிகவும் அக்கறையுடன் பேசுவேன். அப்படித்தான் அந்த விஜய் பற்றி பேசியதையும் பார்க்கிறேன். எனக்கு உள்ளொன்று, புறமொன்று வைத்து பேச தெரியாது. சந்தோசமும், வேதனையும் வெளியே பிரதிபலித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுவேன். 

அந்த வீடியோ வெளியானவுடன் என்னோட தம்பி பைட் மாஸ்டர் ஒருவர் போன் செய்து உடனே அந்த வீடியோவை நீக்க சொல்லுங்க என சொன்னார். நான் உடனே, அந்த வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும் பதற வேண்டாம் என சொன்னேன். வெளியே வந்த அந்த வீடியோவுக்கு மானே, தேனே, பொன்மானே என போட்டு வேறு மாதிரி பரப்பி விட்டார்கள். நான் அதனை குற்றமாகவோ, பேசிவிட்டு வருத்தப்படவோ செய்யவில்லை. என்னுடைய அக்கறை,வலி, வேதனை என அதைப் பார்க்கலாம்” என்று சமுத்திரகனி விளக்கமளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget