மேலும் அறிய

அரசு தடை செய்த அந்த படத்தை வெளியிடுவோம்...சிறைக்குச் செல்ல தயார்..சவால்விட்ட பா ரஞ்சித்

இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று தடை செய்யப்பட்ட சந்தோஷ் திரைப்படத்தை வெளியிட இருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்

பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா நடத்தி வருகிறது. இலக்கிய விவாதம் , திரைப்பட விழா போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வில் இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்ட படமான சந்தோஷ் படம் திரையிடப்பட இருந்தது.

சந்தோஷ் திரைப்படத்தை திரையிட தடை

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சந்தியா சூரி இயக்கியுள்ள படம் சந்தோஷ். சர்வதேச விருது விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. தனது கணவன் இறந்ததைத் தொடர்ந்து அவரது கான்ஸ்டெபிள் வேலைக்கு வருகிறார் நாயகி. பட்டியலின பெண் ஒருவரின் கொலையை விசாரிப்பதே படத்தின் கதை. இப்பம் காவல் துறையை தவறான முறையில் சித்தரிப்பதாக கூறி இந்தியாவில் இப்படத்தை வெளியிட மறுத்தது சென்சார் வாரியம். வானம் திரைப்பட விழாவிலும் படத்தை திரையிட சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் பேசிய பா ரஞ்சித் இப்படி கூறினார்

கைதாக தயார் - பா ரஞ்சித்

சினிமாவில் வெற்றித் தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நமது அரசியலை கலைஞர்கள் புரிந்துகொள்வதை நான் ரொம்ப முக்கியமான நகர்வாக பார்க்கிறேன். மார்கழி மக்களிசை நிகழ்ச்சி கிட்டதட்ட ஒரு கோடி செல்வாகும் நிகழ்வுதான். அவ்வளவு பணத்தை ஏன் ஒரு நிகழ்வில் போட வேண்டும் என்று என்னிடம் கேட்பார்கள். இந்த பணத்தை ஏதாவது மக்களுக்கு உதவும் அமைப்பை  தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான கலாச்சார நிகழ்வுகளில் நாம் தொடங்கி வைக்கும் விவாதம் நிறைய இளைஞரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கரிடம் தான் நான் அதை கற்றுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நிகழ்த்தி காட்டியதில் பெரும் மகிழ்ச்சி. 

அதேபோல் படங்கள் திரையிடக் கூடாது என்று பிரச்சனையும் வந்தது. சந்தோஷ் படத்தை இங்கு இல்லை என்றாலும் வெளியில் கூட திரையிடலாம். நாம் ஒன்றும் பெரிய குற்றம் எல்லாம் செய்யவில்லை. நிச்சயமாக அந்த படத்தை விரைவில் திரையிடுவோம். அப்படி ஒரு பிரச்சனை என்றால் அதை எதிர்கொள்ளலாம் கொஞ்ச நாள் ஜெயிலில் போய் உட்காரலாம். முடியல எவ்ளோதான் வேலை செய்துகொண்டிருப்பது. கொஞ்ச நாள் ஜெயிலில் போய் உட்காரலாம் . சிறைக்கு செல்ல தயார். இங்கு இருக்கும் மக்களுக்கான சினிமாவை எடுப்பதற்கு எங்களுக்கு எல்லா விதமான உரிமையும் உண்டு. அதை சட்டத்தாலும் தடுக்க முடியாது"

 

 

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget