பாம்பன் புதிய ரயில் பாலம் - என்னென்ன சிறப்புகள்!

Published by: ஜான்சி ராணி

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக கட்டப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலத்தை மாற்றாக புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் என்ற பொறியியல் சிறப்பு அந்தஸ்தும் இதற்கு உண்டு.

துருப்பிடிக்காமல் இருக்க முதல் அடுக்கில் 200 மைக்ரான் துத்தநாக கலவை, அடுத்த அடுக்கில் 25 மைக்ரான் ஜெல்லி போன்ற எபோக்ஸி பூச்சு, கடைசி மேல் அடுக்கில் சிலிக்கான் ஆக்சிஜன் கலந்த சிந்தடிக் பாலிமர் பூச்சு செய்யப்பட்டது.

பாலம் கடல் காற்றில் இருந்து துருப்பிடிக்காமல் 35 ஆண்டுகள் வரை பாதுகாக்கும். என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரையில் 70 கி.மீ வேகத்திலும், இடையே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 50 கி.மீ வேகத்திலும் ரயிலை இயக்கலாம். அதே சமயம், பாம்பன் கடல் பகுதியில் 58 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் புதிய ரயில் பாலத்தில் ரயில் இயக்க கூடாது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதில் உள்ள தானியங்கி எலக்ட்ரோ-மெக்கானிக்கல் லிஃப்ட் அமைப்பு, பாலத்தை 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்த உதவும். அதன்படி, அந்த வழியில் கப்பல் பயணிக்க முடியும்.

ரூ.550 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த 2.08 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம், அதிநவீன 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த லிப்ட் பொறிமுறையானது 17 மீட்டர் வரை உயர அனுமதிக்கிறது.

பழைய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1911 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவின் முதல் கடல் பாலமாகும். பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.

புதிய பாம்பன் பாலத்தில் ரயில்கல் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். சமிக்ஞை கட்டுப்பாடுகள் மற்றும் பாதைகளில் தற்போதுள்ள கூர்மையான வளைவு காரணமாக ரயில்கள் மணிக்கு 98 கிமீ வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்த நீளத்தை 2.07 கிலோ மீட்டரை ரயில் இரண்டு நிமிடங்களில் கடக்கும்.