விஷால் திருமணத்திற்கு அழைப்பாரா?.. இயக்குநர் மிஷ்கின் கொடுத்த பதிலடி!
இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் மிஷ்கின் விஷால் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

குட்நைட், கடைசி விவசாயி, மெய்யழகன் போன்ற படங்களில் நடித்த நடிகை ரேச்சல் சொந்தமாக வேலூரில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனை திறந்து வைத்த இயக்குநர் மிஷ்கின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மிஷ்கின், விஜய் அரசியல், தெருநாய் விவகாரம் மற்றும் விஷால் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய் கடுமையான உழைப்பாளி
அப்போது, விஜய் கடுமையான உழைப்பாளி, ரொம்ப நல்ல மனுஷன். திரையுலகில் அவர் எனக்கு தம்பியாக இருந்தார். தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் உறவு எல்லாம் மாறிவிட்டது. அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம் என அவர் தெரிவித்தார். மேலும், தெருநாய்கள் விவகாரத்தில் படித்தவர்கள் நன்கு ஆலோசித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்தால் சரியான தீர்வாக இருக்கும். தெருநாய்களால் உயிரிழப்பும் நடந்திருக்கிறது என மிஷ்கின் தெரிவித்தார்.
விஷால் திருமணத்திற்கு அழைப்பா?
பின்பு விஷால் திருமணம் குறித்து பேசிய அவர், திருமணத்திற்கு விஷால் என்னை அழைக்கவில்லை என்றாலும் தள்ளி நின்றாவது ஒரு ஓரமாக பிரார்த்தனை செய்வேன் என தெரிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. நடிகர் விஷால் இப்படத்தை தயாரித்து நடித்தார். இப்படத்திற்கு பிறகு இதன் 2ஆம் பாகம் லண்டனில் கதை தொடங்கி இந்தியாவில் முடிவது போல் இருந்தது. இப்படத்தின் பட்ஜெட் பிரச்னையால் மிஷ்கின் இப்படத்தில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்தார்.
மனம் திறந்து பேசிய மிஷ்கின்
துப்பறிவாளன் படப்பிடிப்பின் போது நெருங்கிய நண்பர்களாக இருந்த விஷால், மிஷ்கினும் பிரிவுக்கு பின் பேசிக்கொள்வதில்லை. இதனிடையே ஒரு பட விழாவில், விஷாலை இயக்குனர் மிஷ்கின் பொறுக்கி பய என்று மேடையில் பேசியது சர்ச்சையானது. இந்த சம்பவத்திற்கு பிறகு மிஷ்கின் அளித்த பேட்டியின் போது, "விஷால் நல்ல மனிதர், விஷாலை அதிகம் விரும்புகிறேன், அவர் இனிமையானவர். அவருக்கு என்னை விட அதிக ஈகோ உள்ளது, அவர் என்னிடம் பேசவும் மாட்டார். விஷால் படத்தை நான் இயக்க மாட்டேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















