மேலும் அறிய

Mohan G: "தமிழக அரசே தடை செய்” .. திடீரென போர்க்கொடி தூக்கிய இயக்குநர் மோகன் ஜி.. என்ன நடந்தது?

குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

Smoke Biscuit என்ற திண்பண்டத்தை தமிழக அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில், “இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச  இதற்கு தடை விதிக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலினின் ஐடியை குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது உண்மையா என கேட்ட இணையவாசி ஒருவருக்கு மோகன் ஜி அளித்துள்ள பதிலில், “சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன.. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள்.. திருமண விழாக்களில் தருகிறார்கள்.. உண்மையே” என குறிப்பிட்டும் உள்ளார். வழக்கம்போல மோகன் ஜி என்ன பேசுவதென்று தெரியாமல் உளறுவதாக சிலர் விமர்சிக்க தொடங்கினர். 

அதில் ஒரு பதிவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி, “இறைவா.. இந்த மாதிரி பைத்தியங்கள என் கிட்டயே மாட்டி விடுறியே.. Liquid nitrogen பருகினால் உடல் உறுப்புகள், செல்கள் இறுகும்.. சுவாச பிரச்சனை உருவாகும்.. நிமோனியா காய்ச்சல் உருவாகும்.. எதாவது உளறாதீங்கடா பூண்டுகளா” என தன் பாணியில் பதில் சொல்லியுள்ளார். இதனிடையே மோகன் ஜி சொன்ன Smoke Biscuit விஷயம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. பலரும் தமிழ்நாடு அரசை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உடனடியாக நடவடிக்கை அல்லது விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். 

மோகன் ஜி திரைப்பயணம் 

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி, திரௌபதி, ருத்ர தாண்டவன், பகாசூரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தனது அடுத்த படம் தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் என தெரிவித்த மோகன் ஜி அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget