ரஜினி பற்றி ரத்னகுமார் பேசியது பிடிக்கவில்லை..மேடையில் கண்டித்த கார்த்திக் சுப்பராஜ்
லியோ படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி குறித்து இயக்குநர் ரத்னகுமார் பேசியது குறித்து கார்த்தி சுப்பராஜ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்

ரத்னகுமார் இயக்கியிருக்கும் 29 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் லியோ படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி குறித்து இயக்குநர் ரத்னகுமார் பேசியது தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
ரத்னகுமார் இயக்கியுள்ள 29 படம்
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்னகுமார் . தொடர்ந்து ஆடை , குலுகுலு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லியோ , விக்ரம் ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜூடன் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அடுத்தபடியாக 29 என்கிற ரொமாண்டிக் காமெடி படத்தை இயக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , ரெட்ரோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கவனமீர்த்த வித்து இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் , அவினாஷ் , ஷெனாஸ் ஃபாதிமா, பிரேம்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியானது
#KarthikSubbarajDuring29 ♥️#29TheFilm
— Stone Bench (@stonebenchers) December 10, 2025
Tamil: https://t.co/98d98l2GMa
Telugu: https://t.co/cEvUo53vPt@kaarthekeyens @Dir_Lokesh @karthiksubbaraj @MrRathna @RSeanRoldan @ActorVidhu @PreethiOffl @PradeepBoopath2 @madheshmanickam @RSSathishEditor @prosathish @vamsikaka… pic.twitter.com/esUYmi9SGL
ரஜினி பற்றி பேசியது பிடிக்கவில்லை
இந்த நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசும்போது " ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படம் தான் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்த முதல் படம் . அதனால் மேயாத மான் எப்போதும் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். இந்த படத்தின் இயக்குநர் ரத்னகுமார் ஒரு நல்ல இயக்குநர் , நல்ல திரைக்கதை ஆசிரியர் . வெளியே கூட நிறைய பேசுவார் அதெல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனால் அவர் என்ன செய்தாலும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்கிற உணர்வு இருக்கும் . 29 படத்தின் கதையை முதலில் தனுஷிடம் சொன்னோம். தனுஷிற்கு கதை ரொம்ப பிடித்திருந்தது ஆனால் அவர் தற்போது ஆக்ஷன் படங்களில் நடித்து வருவதால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. " என்று கார்த்திக் சுப்பராஜ் பேசினார்





















