மேலும் அறிய

HBD Vadivelu | நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா - வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குநர்!

வெற்றி கொடிக்கட்டு படத்தில் வடிவேலுவின் காதாபாத்திரத்தை வெகுவாக ரசித்த  இயக்குநர் அதே பாணியில்  வடிவேலுவை வாழ்த்தியுள்ளார் .

வைகைப்புயல் என அறியப்பட்ட வடிவேலு இன்று மீம் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். எக்காலத்திற்கு ஏற்ற மாதிரியான நகைச்சுவையால் தலைமுறை கடந்து கோலோச்சி வருகிறார். இன்று பிறந்த நாள் காணும் காமெடி அரசனை பலரும் வாழ்த்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ரசனையுடன் கூடிய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.வெற்றி கொடிக்கட்டு படத்தில் , துபாய் ரிட்டனாக தனது கிராமத்தில் வலம் வரும் வடிவேலு மற்றும் பார்த்திபன் காம்மோ செம ஹிட். அதிலும் “ஆமா துபாய்ல நீ இருந்த  அட்ரஸ் சொல்லு முதல்ல ” என வடிவேலு கேட்க “ நம்பர் .6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயிண் ரோடு, துபாய் “ என பதிலளிப்பார் பார்த்திபன். இது இன்றளவும் மீம் கிரியேட்டர்களின் ஃபேவரெட் டெம்ப்ளேட்.  வெற்றி கொடிக்கட்டு படத்தை சேரன் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

HBD Vadivelu | நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா -  வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குநர்!
 
இந்த காதாபாத்திரத்தை வெகுவாக ரசித்த  இயக்குநர் சேரன், அதே பாணியில்  வடிவேலுவை  வாழ்த்தியுள்ளார் . அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா..  நம்பர் 6, விவேகானந்தர் தெரு,  துபாய் குறுக்குச்சந்துல  இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா..  காமெடில நீங்க எப்பவும் 'கிங்'.. ” என குறிப்பிட்டுள்ளார்.இந்த வாழ்த்திற்கு கீழே ரசிகர்கள் வடிவேலு மீமை தெறிக்கவிட்டு வருகின்றனர். பல தடைகளை கடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். “எனக்கு எண்டே கிடையாது “ என சமீபத்தில் அவர் கொடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பும் இணைய வைரலில் இடம்பிடித்தது. இந்நிலையில் வடிவேலு இன்று (செப்டம்பர் 12 ) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 

வடிவேலு தனது ஆரம்ப நாட்களில்  கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் பல படங்களில் மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அப்போதே, பலரும் வடிவேலுவின் வசன உச்சரிப்பையும், உடல்மொழி அசைவையும் ரசிக்கத் தொடங்கினர். அதன் பிறகு  கலை மீது இவருக்கு இருத்த வெறியும் , கடின உழைப்பும் இன்று மீம் மன்னனாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர செய்துள்ளது.நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக,  சில படங்களில் வில்லனாக, ஹீரோவாக நடித்துள்ள வடிவேலு , காலம் மாறிப்போச்சு, வெற்றி கொடிகட்டு, தவசி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்காக மாநில அரசின் விருதை பெற்றார். சந்திரமுகி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு  வழங்கப்பட்டது.  இது தவிர பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். அவர் இன்னும் பல அகவைகளை கடந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget