மேலும் அறிய

Atlee Property Value: பாலிவுட்டிலும் தடம் பதித்து சாதித்த அட்லீ... சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்..

இயக்குனர் அட்லீ நேற்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக தனது கரியரைத்  தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் தளபதி விஜய்யின் நண்பன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குநராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். 

இயக்குநர் அட்லியின் உண்மையான பெயர் அருண்குமார். அட்லீ என்பது அவருடைய செல்லப்பெயர் என சொல்லப்படுகின்றது. வீட்டில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை அட்லீ என்று தான் அழைப்பார்களாம். சினிமாவிற்குள் நுழைந்ததும், அருண்குமார் என்ற பெயரை விட அட்லீ நன்றாக இருந்ததால் அதையே வைத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ், இந்தி என இருமொழிகளில் இயக்குனராக தடம் பதித்துள்ள அட்லீ நேற்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படத்திற்கு அட்லீ, 25-ல் இருந்து 30 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 45 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

அட்லீ மதுரையில் பிறந்தவர்.  குழந்தை பருவத்திலேயே குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறியதால், அட்லீ சென்னையில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். பின் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்து முடித்துள்ளார்.

அட்லீ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராம். விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தவுடன்  அட்லீ தனது நண்பர்களுடன் இணைந்து பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார். அட்லீயின் 'முகப்புத்தகம்' குறும்படம் யூடியூப்பில் மிகவும் பிரபலமானது.

நடிகை கிருஷ்ண பிரியாவை 2014-ஆம் ஆண்டு அட்லீ திருமணம் செய்து கொண்டார்.  பிரியா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களிலும், நான் மகான் அல்ல , சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ப்ரியா ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். எந்த வெளிநாட்டு படப்பிடிப்புக்கு சென்றாலும் அட்லீ பிரியாவை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல், உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறார். அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இப்படம் உருவாக்கப்படுள்ளது.  இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
அட்லீ திரைப்படங்களின் மீது சிலர் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் மேக்கிங்கில் அசத்தி விடுவதில் வல்லவர். அட்லீ தனது முதல் படமான ராஜா ராணி திரைப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி இருந்தார்.  ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான இப்படம் மெகா ஹிட் ஆனாது.

முதல் படமான ராஜா ராணி திரைப்படம், ஒரு சில படங்களின் சாயலை உள்ளடக்கியதாக உள்ளது என ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அவர் விமர்சனங்களை எல்லாம் கடந்து தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க

9000 Crore Deposit: ரூ. 9000 கோடி தூக்கிக் கொடுத்த பிரபல வங்கி... அதிர்ச்சியில் உறைந்த கார் ஓட்டுநர்! நடந்தது என்ன?

Hotel Raid: ஓட்டல் ஓனர்களே ஜாக்கிரதை... வேட்டையாட வரும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்! சாப்பாடு தரம் ரொம்ப முக்கியம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget