SJ Suryah Love Failure: 3 காதல் தோல்விக்கு பின் புத்தி வந்தது! முன்னாள் காதலிகளுக்கும் நன்றி சொன்ன எஸ் ஜே சூர்யா! ஏன் தெரியுமா?
தனது 3 முன்னாள் காதலிகளுக்கும் எஸ் ஜே சூர்யா நன்றி சொன்ன நிலையில், தலைவரே 3 காதலிகள் போதுமா என்று கேட்டு நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக உள்ளார். 'வாலி' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா, நடிகர் பாண்டியராஜன், அமலா நடிப்பில் வந்த நெத்தியடி படம் மூலமாக நடிகராக மாறினார். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த அவர் கிழக்கு சீமையிலே, ஆசை, குஷி ஆகிய படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து.. நியூ படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பிறகு அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், டான், வாரிசு, இந்தியன் 2, ராயன், வீர தீர சூரன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 3, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் எஸ் ஜே சூர்யா தனது 3 முன்னாள் காதலிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... எனக்கு 3 காதல் இருந்தது. பொதுவாக ஒரு டயலாக் சொல்வாங்க அல்லவா. அதாவது நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஆனால், எனக்கு 3 சூடு பட்ட பிறகு தான் லவ் பண்ண கூடாது என்று தெரிந்தது. ஏனென்றால் நான் எதிலாவது போய் கமிட்டாகியிருந்தால் என்னுடைய சுதந்திரம் பறிபோயிருக்கும்.
அதனால், என்னுடைய 3 முன்னாள் காதலிகளுக்கு எல்லாம் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள்... "தலைவரே 3 காதலிகள் போதுமா என்று நக்கலாக கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள். தற்போது எஸ் ஜே சூர்யா ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.





















