Vignesh Shivan: அட நம்ம விக்கியா இது.? நடிகராக அறிமுகமான படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க..!
நயன்தாராவை அண்மையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக நடிகராக அறிமுகமான படத்தின் ஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது
இன்று நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு சோசியல் மீடியாவின் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். போடா போடி மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ‘நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’, என பயணம் செய்த விக்னேஷ் சிவன் அண்மையில் நயன் சமந்தா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடக்கத்தில் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய விக்னேஷ் சிவன் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி இவர் முதன்முறையாக நடிகராக அறிமுகமான படம் 2007 ஆம் ஆண்டு திகில் படமாக உருவான சிவி. இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Dir Vignesh ShivN made an appearance as the protagonist's friend in the 2007 horror flick #Sivi
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 23, 2020
Vignesh Shivan worked as an assistant director in the movie. Later, he made his directorial debut with the romantic comedy #PodaPodi (2012).
[Credits - Bhuvi Sakthi Mohan] pic.twitter.com/zHckFS1xZ8
முன்னதாக, தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Exclusive! #Nayanthara & #VigneshShivan's Thirupati Visit Photos ❤️ 1/n#VigneshShivanNayanthara #WikkiNayan #Nayan #VigneshShivanMarriage pic.twitter.com/5QuFGYqC0G
— Happy Sharing By Dks (@Dksview) June 10, 2022
தொடர்ந்து மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியிருந்தார்.