மாஸ்டர் படத்தால் 90 கோடி நஷ்டமா...தயாரிப்பாளர் பிரிட்டோவின் வைரல் வீடியோ
விஜயின் மாஸ்டர் திரைப்படத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஸேவியர் பிரிட்டோவுக்கு 90 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன

மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் மாஸ்டர். விஜயின் உறவினர் ஸேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்தார். கொரோனா ஊரடங்கு முடிந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 135 கோட் பட்ஜெட்டில் உருவான மாஸ்டர் 220 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. மாஸ்டர் படத்தின் வசூல் குறித்து தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இப்படத்தால் தனக்கு 90 கோடி நஷ்டம் என தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தால் 90 கோடி நஷ்டம்
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜயின் பினாமி என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியபோது பிரிட்டோ இப்படி கூரியுள்ளார் " என்னுடைய மாமியாரும் விஜயின் அப்பாவும் உடன் பிறந்தவர்கள். விஜய் சினிமாவில் அறிமுகமாகும் போது இருந்தே எனக்கு அவரைத் தெரியும் . விஜயை வைத்து செந்தூரபாண்டி படம் எடுத்தபோது தான் என்னை அவர்கள் சினிமாவில் அழைத்தார்கள். அந்த படம் வெற்றிபெறவே அடுத்த படத்தையும் என்னையே பண்ண சொன்னார்கள். எனக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. என்னுடை மனைவி தொடங்கிய கால்பந்தாட்ட அணியில் எனக்கு 90 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு உதவி செய்யும் விதமாக தான் மாஸ்டர் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை விஜய் எனக்கு கொடுத்தார். மற்றபடி விஜய்க்கும் எனக்கும் எந்த விதமான தொழில் ரீதியான தொடர்பும் இல்லை. மாஸ்டர் படத்தையே நான் தயாரிக்கவில்லை 7 ஸ்கிரீன் லலித் குமார் தான் அந்த படத்தை தயாரித்ததாக கூறினார்கள். ஆனால் விஜய் கேட்டுகொண்டதால் லலித் அந்த படத்தில் லைன் ப்ரோடியூசராக பணியாற்றினார். " என பிரிட்டோ கூறியுள்ளார்
Video Cut பண்ணி Master a Flop அக்கிட்டான் 🤣🤣🤣 டேய் வலுக்க @Rajinikanth கொஞ்சும் வெக்கம் இருக்கா டா???#Master || #FakeEditedVideo
— 𝗥 𝗨 𝗞 𝗦 𝗛 ₳₳ 𝗡 (@BloodyHaterS) January 28, 2025
pic.twitter.com/QD2PvKCWPJ
இந்த வீடியோவை தங்களுக்கு ஏற்ற மாதிரி எடிடி செய்து மாஸ்டர் படத்தால் 90 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு வீடியோவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள் ஒரு தரப்பினர்

