Vikram Health Issue: அப்பாவுக்கு நெஞ்சுவலி இல்லை...வதந்தியை நம்பாதீங்க... இன்ஸ்டாவில் உருகிய துருவ் விக்ரம்..
விக்ரமுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.
நடிகர் விக்ரமுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பாக அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
1966-ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார்.அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய 'சேது' திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காசி, ஜெமினி, சாமி, தில், தூள், பிதாமகன், அருள், அந்நியன், தெய்வத் திருமகள், ராவணன், ஐ ஆகிய படங்கள் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மட்டுமல்லாது பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட விக்ரம் திரைக்கதைக்காக எப்படிப்பட்ட ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கக்கூடியவர். கடைசியாக மகன் துருவ் உடன் அவர் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.
#DhruvVikram on #ChiyaanVikram s health!
— Gopi (@gopi_tweetss) July 8, 2022
Chiyaan is fine guys! Nothing to worry ❤️ pic.twitter.com/0POliYtikw
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று மாலை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்படத்தில் விக்ரமின் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் கேரக்டர் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் விக்ரம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அதனை விக்ரம் தரப்பில் மறுத்தனர்.
இதன் பின்னர் விக்ரமுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இதனையடுத்து விக்ரமின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரமுக்கு இதயத்தில் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டதாகவும், தவறான தகவலாக கூறப்படும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படவில்லை.
அவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதனை விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்