Vathi Shooting: தொடங்கியது தனுஷின் வாத்தி படப்பிடிப்பு..வெளியானது புது ஸ்டில்.!
நடிகர் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்களில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் தற்போது துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
மேலும் வாசிக்க: Chengalpattu Encounter: நேற்று இருவர் கொலை.. இன்று இருவர் என்கவுண்டர் - பரபரப்பில் செங்கல்பட்டு!
நானே வருவேன் படத்துக்கு பிறகு தனுஷ் தெலுங்கில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கும் இப்படம் தமிழிலும் நேரடி தெலுங்கு படமாகவும் வெளியாகிறது. இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
. @dhanushkraja in & as #Vaathi /#SIR ~ Filming Begins 🎥 ⚡️#SIRMovie @iamsamyuktha_ #VenkyAtluri @gvprakash @dineshkrishnanb @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts pic.twitter.com/6jQ6IOhZXI
— Sithara Entertainments (@SitharaEnts) January 7, 2022
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் தனுஷ் மாணவர் லுக்கில் இருக்கிறார். இப்படத்தில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது மாணவர் லுக்கில் அவர் இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
அரை மணி நேர கேப்.. ஒரே கும்பல்.. அடுத்தடுத்து இரண்டு கொலை.! செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்!