Chengalpattu Encounter: கஞ்சா போட்டி.. உளறிய இளம்பெண்.. சிக்கிய ரவுடிகள்.. செங்கல்பட்டு என்கவுண்ட்டர் பின்னணி!
கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவைகளில் ஏற்பட்ட போட்டியால் இரட்டை கொலை நடந்துள்ளது.
![Chengalpattu Encounter: கஞ்சா போட்டி.. உளறிய இளம்பெண்.. சிக்கிய ரவுடிகள்.. செங்கல்பட்டு என்கவுண்ட்டர் பின்னணி! Chengalpattu Encounter Know Double Murder Complete Background information- Know in Detail Chengalpattu Encounter: கஞ்சா போட்டி.. உளறிய இளம்பெண்.. சிக்கிய ரவுடிகள்.. செங்கல்பட்டு என்கவுண்ட்டர் பின்னணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/07/454fc42ed5afa065a97be6d19ea0d6b3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செங்கல்பட்டில் நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேஷ் ஆகிய இரண்டு பேரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இதனையடுத்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இந்த சூழலில் நேற்று நடந்த இரட்டை கொலைக்கு தொடர்புடையவர்களான மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோரை இன்று காவல் துறையினர் மாமண்டூர் பாலாறு அருகே பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளாலும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து தற்காப்புக்காக காவல் துறையினர் அவர்கள் இருவரையும் என்கவுன்ட்டர் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த என்கவுன்ட்டரில் இருவரும் உயிரிழந்தனர். ரவுடிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவல் துறையினர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த இரட்டை கொலை மற்றும் என்கவுன்ட்டர் குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்று நடந்த இரட்டை கொலைக்கு தொடர்புடையவர்களாக கருதப்படும் ஜெசிக்கா என்ற பெண்ணையும் மற்றும் மாதவன் ஆகியோரை செங்கல்பட்டு காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இரட்டை கொலையில் தொடர்புடைய மொய்தீன் மற்றும் தினேஷ் தலை மறைவாகினர். அவர்களை பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. நிலைமை இப்படி இருக்க தலைமறைவானவர்கள் குறித்து இளம்பெண் மற்றும் மாதவன் ஆகிய இருவர் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான காவல் துறையினர் இரண்டு பேரையும் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது இரண்டு தரப்புக்குமிடையே தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ரவுடிகள் இரண்டு பேரும் நாட்டு வெடிகுண்டையும், அரிவாளையும் பயன்படுத்தியுள்ளனர்.
நிலைமை கை மீறி செல்வதை உணர்ந்த காவல் துறையினர் தங்களை காத்துக்கொள்வதற்காக என்கவுன்ட்டர் செய்தனர். மேலும் இந்த இரட்டைக்கொலைக்கு கஞ்சா விற்பனை மற்று கட்டப்பஞ்சாயத்து போன்றவைகளால் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Chengalpattu Encounter: நேற்று இருவர் கொலை.. இன்று இருவர் என்கவுண்டர் - பரபரப்பில் செங்கல்பட்டு!
TN Assembly Session LIVE: கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)