தனுஷ் இந்தியில் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' படத்தின் டீசர் வெளியானது
தனுஷ் , க்ரித்தி சனோன் நடித்து இந்தியில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மே' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலை இந்தியில் தனுஷ். கரித்தி சனோன் இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் திரைப்படமான 'தேரே இஷ்க் மே' படத்தின் டீசரும் இன்று வெளியாகியுள்ளது.
தேரே இஷ்க் மே டீசர்
இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார் தனுஷ். இந்தியில் அவர் நடித்த முதல் படமே 100 கோடி வசூல் தொட்டது . தொடர்ந்து பால்கி இயக்கிய ஷமிபதாப், மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மூன்றாவது முறையாக ஆனந்த் எல் ராய் கூட்டணியில் தனுஷ் நடித்துள்ள படம் தேரே இஷ்க் மே. முன்னணி பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
காதலில் வாழ்வோர் பலர் ஆனால்
— Kriti Sanon (@kritisanon) October 1, 2025
அதில் கரைபவர் வெகு சிலரே ❤️🔥
சங்கர் மற்றும் முக்தியின் காதல் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்.🙏 #TereIshkMein#TereIshkMeinTeaser: https://t.co/G00dyjIs9u@dhanushkraja @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar @Irshad_kamil… pic.twitter.com/ikSLASfRSV
இட்லி கடை விமரசனம்
தனுஷின் இட்லி கடை படத்தை டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். நித்யா மேனன் , சத்யராஜ், அருண் விஜய் , ஷாலினி பாண்டே , சமுத்திரகனி , இளவரசு , ராஜ்கிரண் , கீதா கைலாசம் , ஆர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.





















