Kuberaa Day 1 Collection: 120 கோடி பட்ஜெட்... 'ராயன்' பட வசூலிடம் மண்டியிட்ட 'குபேரா'! மொத்த வசூல் இவ்வளவு தானா ?
நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து... அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருபவர் தனுஷ். நடிப்பு 'ராட்சசன்' என பெயரெடுத்த தனுஷ், தன்னுடைய திறமையான நடிப்பை பறைசாற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
அதே போல் கோலிவுட் திரை உலகை தாண்டி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக இவருடைய 50-ஆவது திரைப்படமாக 'ராயன்' படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரூ.100 கோடி வசூல் சாதனையை படைத்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று வெளியான 'குபேரா' திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய ரோலில் நடித்துள்ளார். குறிப்பாக தனுஷ் இந்த படத்தில் ஒரு பிச்சைக்காரராக நடித்து பலரையும் வியப்படையச் செய்துள்ளார்.
'குபேரா' திரைப்படத்தை ரூ.90 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடிக்க பட குழு திட்டமிட்ட நிலையில், இதுவரை 120 கோடி பட்ஜெட் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தை, தனுஷ் தன்னுடைய மகனுடன் சேர்ந்து நேற்று ரோகிணி திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

படம் வெளியானது முதல் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களே கிடைத்து வளர்கிறது. படம் 3 மணிநேரம் ஓடுவது ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. அதே நேரம் தனுஷின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், 'குபேரா' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, 'குபேரா ' முதல் நாளில் ரூ.13 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இது ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ரிலீஸ் ஆன 'ராயன்' பட வசூலை விட மிகக்குறைவு. 'ராயன்' திரைப்படம் முதல் நாளில் ரூ.15.7 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.





















