Vidyu Raman: 1 மாசத்துக்குள்ள 10 கிலோ.. இப்படித்தான் வெயிட்டை குறைக்க முடியும் - வித்யுலேகா சொல்லும் சீக்ரெட்..
தனது உடல் எடையை குறைத்தது குறித்து நடிகை நடிகை வித்யுலேகா ராமன் பேசியிருக்கிறார்.
தனது உடல் எடையை குறைத்தது குறித்து நடிகை நடிகை வித்யுலேகா ராமன் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ வெயிட்டை குறைக்க வேண்டும் அப்படின்னு முடிவெடுத்ததற்கு அப்புறமா உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அதுக்கு 5 முதல் 6 நாட்கள் தேவைப்பட்டுச்சு.
அடுத்தபடியா, லோ கார்ப் டயட்டுக்கு மாறுனேன். அரிசி, சுகர், மாவு உள்ளிட்ட உணவுகளை விட்டேன். நான் ஒரு நான் வெஜ் பிரியை. அதனால அரிசி உணவை கம்மியா எடுத்துக்கிட்டு, நான் வெஜ் சார்ந்த உணவுகளை நிறைய எடுத்துக்கிட்டேன்.
இல்ல அப்படின்னா அரிசி கம்மியா எடுத்துக்கிட்டு, காய்கறிகள் நிறைய எடுத்துக்குவேன். இப்படி மாறுனதுக்கு அப்புறமா எனக்கு ஒரு திருப்தியா வந்துச்சு. பட்டினி கிடந்து வெயிட் குறைக்க முடியாது. பட்டினி கிடந்தா உடனே வெயிட் ஏறிறும். தயவு செய்து 10 நாள்ல 10 கிலோ குறைக்கிறாங்கன்னு எதையாவது பார்த்து மயங்காதீங்க. நான் 20 கிலோ குறைக்க 2 வருஷம் எடுத்துக்கிட்டேன்.
View this post on Instagram
80 சதவீதம் டயட்.. 20 சதவீதம் வொர்க் அவுட்.. நான் கல்யாணத்துக்காக வெயிட் குறைக்கல, எனக்காக குறைச்சேன். இந்த வெயிட் லாஸ் - ல எனக்கு கிடைச்ச சின்ன சின்ன மோட்டிவேசன் தான் என்ன தொடர்ந்து மோட்டிவேட் பண்ணுச்சு. வெயிட் குறைக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா அதை மெயிண்டெயிண்ட் பண்றதுதான் கஷ்டம்” இவ்வாறு பேசினார்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா- ஜீவா ஆகியோரின் நடிப்பில் உருவான ‘நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். அந்தப் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு இருந்த நகைச்சுவை கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வீரம், ஜில்லா, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் போன்ற படத்திலும் நடித்தார்.
அதேபோல அமேசானில் வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
View this post on Instagram
தொடர்ந்து தனது உடல் எடையையும் குறைத்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக மாறினார் வித்யுலேகா. தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் வெளியுடத் தொடங்கினார். தொடர்ந்து வித்யுலேகாவுக்கும், சஞ்சய் என்பவருக்கும் சென்னையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த திருமண நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்லோட் செய்த வித்யுலேகாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.