Arulnithi : வெளியாகிறது அருள்நிதியின் புதிய படம்; தேஜவு அப்டேட் இதோ..!
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் படம் தேஜாவு. இப்படம் இம்மாதம் 22-ஆம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தினை அரவிந்த் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் படம் தேஜாவு. இப்படம் இம்மாதம் 22ம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தினை அரவிந்த் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எண்ணிக்கைக்காக படங்களில் நடிக்காமல், தான் நடிக்கும் கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா, மக்களிடத்தில் தனி கவனம் பெறுமா என, யோசித்து படங்களை தேர்வு செய்யக் கூடியவர்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி. மிகப் பெரிய அரசியல் பலம் வாய்ந்த, குடும்ப பின்னனியில் இருந்து வந்திருந்தாலும், எப்போதும் மிகச் சாதாரணமான ”கலைஞராகவும் ” அறியப்படுபவர் நடிகர் அருள்நிதி.
#dejavu from July 22nd 🙂🙂🙂 pic.twitter.com/4Ct70lULod
— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 11, 2022
வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. இவர் அதை தொடர்ந்து நடித்த மௌனகுரு, டிமான்டி காலணி, டி - பிளாக், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் மக்களிடத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களிடத்திலும் தனிக் கவனம் பெற்றது. நாலு பேரும் நல்ல இருந்த ஊரும் படம் காமெடியில் கலக்கிய படமாக இருக்கிறது. 2010ல் வம்சம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அருள் நிதி, இதுவரை 10 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் 11வது படம். ஏற்கனவே இவர் நடித்து இம்மாதத்தின் தொடக்கத்தில் வெளியான படம், டி- பிளாக். இதே மாதத்தில் இவரது இரண்டாவது படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் பற்றிய தகவலை நடிகர் அருள்நிதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் இந்த ஆண்டின் ஜனவரி 27ம் தேதி வெளியாகி ரசிகர்களிட்ரையே நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது.
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள தேஜாவு படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்ப்டத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கமெண்ட்களை வாங்கி வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்