Deepika Padukone | ’’அது மோசமான அறிவுரை.. மார்பகத்தை பெரிதாக்க சொன்னார்கள்’’ - மனம் திறந்த தீபிகா படுகோன்
திரைத்துறையில் கிடைத்த அறிவுரைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தீபிகா
தீபிகா..
இந்திய சினிமாவின் குயினாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். என்றும் மாற இளமையோடும் வசீகரத்தோடு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தீபிகா படுகோன் அமெரிக்காவில் பிறந்தவர். கடந்த 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹாகெனில் பிறந்தார். இவர் தாயார் பெயர் உஜ்ஜலா மற்றும் தந்தை பிரகாஷ் படுகோன்.
பிரகாஷ் படுகோன் மிகச்சிறந்த பூப்பந்தாட்ட வீரராகவும் இருந்திருக்கிறார். தீபிகா என்னதான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக களமிறங்கியிருந்தாலும் அவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர். தீபிகா 11 மாத குழந்தையாக இருக்கும்பொழுது , குடும்பத்துடன் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடியேறியுள்ளனர். பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியிலும் , மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். பின்னர் மாடலிங், ஃபேஷன் ஷோ, விளம்பர படங்கள் என திரைத்துறையில் கால்பதித்த தீபிகா தற்போது முன்னணி நாயகியாக வலம்வருகிறார்.
View this post on Instagram
அறிவுரை..
இந்நிலையில் திரைத்துறையில் கிடைத்த அறிவுரைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தீபிகா. திரைத்துறையில் சக நடிகரான ஷாருக்கான் பல நல்ல அறிவுரைகளை வழங்குவார். குறிப்பாக ''படங்கள் என்பதே ஒரு வாழ்க்கை. படங்களில் நடிக்கும் போது ஒரு வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். அதனால் நம் மனதுக்கு ஒத்துப்போகும் நபர்களுடன் சேர்ந்தே பணியாற்ற வேண்டும்'' என்ற அறிவுரை மிக முக்கியமானது. ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட பல படங்களில் தீபிகா- ஷாருக்கான் சேர்ந்து நடித்துள்ளனர்.
View this post on Instagram
பெரிய மார்பகம்..
மிக முக்கியமான அறிவுரையைப் போலவே மிகவும் கீழ்த்தரமான அறிவுரைகளையும் தான் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 18 வயது இருக்கும் போதே சிலர் என்னுடைய மார்பகத்தை பெரிதாக்கச் சொல்லி அறிவுரை வழங்கினார்கள். அதற்கான சிகிச்சையெல்லாம் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். அப்போது எனக்கு 18 வயதுதான். அப்போதும்கூட அந்த தேவையில்லாத அறிவுரைகளை ஏற்காமல் நான் தன்மையோடு கடந்து வந்திருக்கிறேன் என்பதே ஆச்சரியம்தான் என்றார்.