சுவிட்சர்லாந்தில் பிரம்மாண்டமாக தொடங்கிய நடன களம்..ஷெரிஃப் மாஸ்டரின் புதிய முயற்சி
ஷெரிப் மாஸ்டரின் ஜூபாப் ஹோம் சுவிட்சர்லாந்தில் பிரம்மாண்டமாக தொடக்கத்தினால் உலகளாவிய அளவில் தனது அடையாளத்தை உருவாக்கி உள்ளது.

ஷெரிப் மாஸ்டர் தனது நடன தளமான ஜூபாப் ஹோம் ஆப்பை இன்னுமொரு உயரத்திற்கு கொண்டு செல்ல 2024, டிசம்பர் 14 அன்று சுவிட்சர்லாந்தில் நடந்த இசை துள்ளல் 2024 நிகழ்வில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்தார்.
இதற்கு முன்பு, ஜூபாப் ஹோம் 2024, நவம்பர் 30 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமானது. அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இயக்குநர்கள் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா கலந்து கொண்டு ஜூபாப் ஹோம் தளத்தை வெளியிட்டனர். நடன ஆர்வலர்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை உருவாக்கியதற்காக ஷெரிப் மாஸ்டரின் அர்ப்பணிப்பபையும் மற்றும் அவரின் ஆர்வத்தையும் மூவரும் பாராட்டினர்.
மேலும், சோலோ மூவிஸ் வழங்கிய சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான நடன குழுக்களின் உற்சாகமான நடனங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆப், சோலோ மூவிஸ் வசி, வரதன், மற்றும் பிரபல நடன ஆசிரியர் கௌரி ஆகியோரால் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் இந்தியர்களுக்கும் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் நடன OTT தளமான ஜூபாப் ஹோம், இப்போது ஐரோப்பா முழுவதும் கிடைக்கிறது. இது நடன ஆர்வலர்கள் இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட சிறந்த தளமாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் பொருத்தமான தனிப்பட்ட உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் ஜூபாப் ஹோம், நடனத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த தளமாக உள்ளது. விரைவில் பல நாடுகளிலும் அறிமுகமாகும் திட்டத்துடன், ஜூபாப் ஹோம் உலகளாவிய அளவில் பெருமை பெற தயாராக இருக்கிறது.
இப்போதே ஜூபாப் ஹோம் ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் – உலகம் முழுவதும் உள்ள நடன ஆர்வலர்களுடன் இணைந்து மகிழுங்கள்!
LET THE PASSION TAKE OVER 🔥
— Kollywood Cinima (@KollywoodCinima) December 2, 2024
First of its kind Launch by #Sherif Master.. An exclusive OTT platform dedicated to dance - #JoopopHome 👏@karthiksubbaraj, @Rajkumar_KP & @actorsimha graced the opening event ❤️
An One stop App for all Dance enthusiasts is here and its available… pic.twitter.com/EMuVsxr0Dd
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

