Cook with Comali Sivaangi : சமையல்னா என்ன தெரியுமா? கோமாளி சமைக்கக்கூடாதா? வெரைட்டி டிஷ் மூலம் ஷிவாங்கி பதிலடி
‘குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக கலக்கி வருகிறார் ஷிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் வசீகர குரலால் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே அந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்க்க ஆரம்பித்தனர். உலகளவில் பிரபலமான ஷிவாங்கி டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
நெகட்டிவ் விமர்சனங்கள் :
இப்படி மூன்று சீசன்களாக கோமாளியாக லூட்டியடித்த ஷிவாங்கி குக் வித் கோமாளி 4வது சீசனில் தீரென குக்காக ப்ரமோஷன் பெற்றார். இந்த தகவல் அறிந்த பலர் கோமாளியாக இருக்கும்போதே இந்த பொண்ணுக்கு சமையல்னா என்னனு ஏபிசிடி கூட தெரியாது இதெல்லாம் குக்காகி என்ன செய்ய போகுதோ என பயங்கரமாக விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினர். ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் குக்காக கலக்கி வருகிறார் ஷிவாங்கி.
கோமாளியிடம் சிக்கிய ஷிவாங்கி :
குக் வித் கோமாளி 4வது சீசனில் புது புது குக்குகளை போலவே புதுசா பல கோமாளிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த வார எபிசோடில், ஷிவாங்கியின் கோமாளியாக இருந்தவர் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக வெற்றிபெற்ற மோனிஷா. காதில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டு இருக்கும் கோமாளியிடம் தேவையான பொருட்களை விளக்குவதே சரியான காமெடியாக இருந்தது. கடந்த மூன்று சீசன்களாக ஷிவாங்கி கோமாளியாக அவரின் குக்குகளை என்ன பாடுபடுத்தினரோ அது எல்லாம் இப்போது தனக்கே நடக்கிறது என புலம்பி கொண்டே இருந்தது பார்ப்பவர்களுக்கு குளுகுளுவென இருந்தது.
அசைவ உணவு டேஸ்டில் காஷ்மீரி உணவு :
இந்த வார எபிசோடில் ஷிவாங்கி ஜாக்ஃப்ரூட் ரோகன் ஜோஷ் என்ற டிஷ் சமைத்து இருந்தார். அசைவ உணவை போல அதே சுவையில் வித்தியாசமாக ஜாக்ஃப்ரூட்டை வைத்து மிகவும் சுவையான உணவை சமைத்து இருந்தார். இந்த டிஷ்ஷை சுவைத்த செஃப் வெங்கடேஷ் பட் ஷிவாங்கியை பாராட்டினார். மேலும் அவரின் கோமாளியாக வந்த மோனிஷாவும் ஷிவாங்கிக்கு சப்போர்ட்டாக இருந்ததையும் பாராட்டினார்.
விமர்சித்தவர்கள் எங்கே ?
கோமாளியாக இருந்த ஷிவாங்கி எப்படி குக்காக காலம் தள்ளுவார் என விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடியை தனது சமையல் மூலம் நிரூபித்துள்ளார் குக் ஷிவாங்கி. இந்த நான்கு வாரமாக தனது சமையலால் நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார் ஷிவாங்கி என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சீசன்களில் இப்படி பலரும் தங்களின் கோமாளியோடு சேர்த்து சமையலிலும் கலக்க முடியும் என்பதற்கு ஒரு ரோல் மாடலாக முன்னேறியுள்ளார் ஷிவாங்கி. வாழ்த்துக்கள்!!!