உதயநிதியிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய சூரி!

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய நகைச்சுவை நடிகர் சூரி.

FOLLOW US: 

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

திராவிட அரசியல் நீடிப்பது மகிழ்ச்சி; முதல்வரிடம் கொரோனா நிதி அளித்த நடிகர் சிவகுமார் பேட்டி

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழிழ்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரஜினி திடீர் சந்திப்பு

Tags: Corona Virus tamil cinema Corona Relief Fund comedy actor soori

தொடர்புடைய செய்திகள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!

Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!

Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?