மேலும் அறிய

எடைகுறைத்த பால சரவணனுக்கு ரசிகர் போட்ட குபீர் கமெண்ட்... ஊரே சிரிக்க காரணம் என்ன?

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தை பதிவு செய்துள்ள பால சரவணன், 2019 ல் இருந்த தனது படத்துடன் ஒப்பிட்டுள்ளார். 22 கிலோ குறைக்க காரணமான மித்ரனுக்கு நன்றியும் அதில் கூறியுள்ளார். 

இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை... ‛உடல் எடையை எப்படி குறைப்பது?’ என்பது தான். வாயை கட்ட முடியவில்லை; உடற்பயிற்சிக்கு சென்றால் அதை தொடர முடியவில்லை. ஏதாவது டயட் எடுக்கலாம் என்றால் மனம் ஒத்துழைக்கவில்லை, என பல குறைகளோடு கடக்கிறது.  அவ்வப்போது சில செலிபிரிட்டிகள் யாராவது உடலை குறைக்கும் போது, அவர்கள் சொல்லும் டிப்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெறும். நாம் பார்க்கப் போவதும் அது மாதிரியான ஒருவர் தான். காமெடி நடிகர் பால சரவணன். 

எடைகுறைத்த பால சரவணனுக்கு ரசிகர் போட்ட குபீர் கமெண்ட்... ஊரே சிரிக்க காரணம் என்ன?

விஜய் டிவியின் கனா காணும் காலங்களில் அறிமுகம் ஆனவர். அதன் பின் தமிழ் சினிமாவில் காமெடி படலத்தை தொடங்கியவர். 2013 ல் குட்டிப்புலி படத்தில் பப்பு கதாபாத்திரத்தில் நடித்த பால சரவணன் கதாபாத்திரம், பலரையும் கவர்ந்தது. அதன் பின் வாய்ப்புகளும் குவிந்தன. 

ஈகோ, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், கோ 2,  அதே கண்கள், ஹரஹர மகாதேவகி, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், தண்ணி வண்டி என இன்னும் எக்கச்சக்க படங்களில் படையெடுத்தார் பால சரவணன். அவரின் உடல் தோற்றமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கட்டையா, குட்டையா என்பார்களே... அது மாதிரியான தோற்றம். அது அவரது காமெடிக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் தான் லாக்டவுன் பலரின் மனதை மாற்றியதைப் போல, பால சரவணன் மனதையும் மாற்றியது. 

உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். அதற்கான தீவிர பயிற்சியையும் மேற்கொண்டார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஒன்றல்ல இரண்டல்ல 22 கிலோ குறைத்து, காமெடி நடிகர் தற்போது ஹீரோ நடிகரைப் போல காட்சியளிக்கிறார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தை பதிவு செய்துள்ள பால சரவணன், 2019 ல் இருந்த தனது படத்துடன் ஒப்பிட்டுள்ளார். 22 கிலோ குறைக்க காரணமான மித்ரனுக்கு நன்றியும் அதில் கூறியுள்ளார். 

இதுவரை பிரச்சனை இல்லை... ஆனால், அந்த பதிவில் வந்து பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், பதிவு செய்த கமெண்ட் பலரின் கவனத்தை பெற்றது. 

‛‛Bro., கூடிய சீக்கிரம் உங்களுக்கே தெரியாம உங்கள ஒரு hindi ad ல போடப்போறாங்க.. "Hi.. Iam Pranav metra.. I proud to says i loss 30 kgs in 3 months.. My BMI was 38.. Now first time in my life its going to 28.5.. ’’

என்று உடல் எடை குறைப்பு விளம்பரம் குறித்து கிண்டலடித்து பதிவிட்டார். அதற்கு பால சரவணனே சிரித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எடைகுறைத்த பால சரவணனுக்கு ரசிகர் போட்ட குபீர் கமெண்ட்... ஊரே சிரிக்க காரணம் என்ன?

ஆனால், இதுவரை தனது உடல் எடை குறைய காரணம் என்ன என்பதை பாலசரவணன் கூறவில்லை. ஆனால், அவர் அதை மறைக்கவும் இல்லை. விரைவில் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget