Cinema Headlines: த்ரிஷா ,குஷ்பூ மீது மான நஷ்ட வழக்கு? நடிகை பிரேமி உருக்கம்! இன்றைய சினிமா செய்திகள்
திரைத்துறையில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்
- Jigarthanda Double X: 73 வயதில் முதல் படம்: ராகவா லாரண்ஸ் கொடுத்த நம்பிக்கை - ஜிகர்தண்டா நடிகர் ரத்தினம்
தன்னுடைய 73 ஆவது வயதை எட்டியுள்ள நடிகர் ரத்தினம் சென்னையில் ஜிம் ட்ரெயினராக இருந்து வருகிறார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடிப்பதற்காக தன்னை ஸ்டோன் பெஞ்சு நிறுவனம் சார்பாக அழைத்திருந்ததாகவும் முதலில் தயங்கி பின் நடிக்க சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனக்கு சினிமா மீது பெரியளவிற்கான அபிப்பிராயம் இல்லாமல் இருந்ததாகவும் ஆனால் இந்தப் படத்திற்காக அனைவரது உழைப்பையும் பார்த்து தனக்கு சினிமா மீது மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்தில் ஒரு காட்சியில் ராகவா லாரண்ஸை தான் டேய் என்று அழைக்க வேண்டியதாக இருந்ததால் தான் லாரண்ஸிடம் சென்று மன்னிப்புக் கேட்டதாகவும் அதற்கு ராகவா லாரண்ஸ் “நீங்க எனக்கு தந்தை மாதிரி நீங்க என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்” என்று தனக்கு தைரியம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
- Lokesh Kanagaraj: 'என் படத்துல நீங்க நடிக்கணும்’ .. பிரபல நடிகரிடம் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!
- Actress Premi: ’மகேந்திரனை திருமணம் செய்ததே தவறு.. தண்டனை அனுபவிச்சிட்டேன்’ .. நடிகை பிரேமி உருக்கம்..
- Mansoor Ali Khan: “த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு” - மீண்டும் பிரச்சனையை கிளப்பும் மன்சூர் அலிகான்..
- Karthik Subbaraj : ஐடி வேலையை விட்டுவிடலாம்னு நினைச்சேன்... 'கற்றது தமிழ்' ஏற்படுத்திய தாக்கம் குறித்து கார்த்திக் சுப்பராஜ்...
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் திரையுலகில் வருவதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான சமயத்தில் நான் ஐடியில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு பிளாக் எழுதும் பழக்கம் இருந்தது. அந்த படத்தை பார்த்த பிறகு நான் என்னுடைய ப்ளாக்கில் மிகவும் ஃபீல் பண்ணி எழுதி இருந்தேன். அதில் வரும் ஒரு சில வசனங்கள் என்னை மிகவும் பாதித்தது. "ஐடி துறையில் இருந்து வந்து வீட்டு வாடகையை எல்லாம் ஏத்தி விட்டு போயிடுறீங்க. இதை மற்றவர்களால் கொடுக்க முடியுமா? வாடகை மட்டும் அல்ல மொத்தமா வாழ்வாதாரத்தையும் மற்ற எல்லா விஷயங்களின் விலையையுமே நீங்கள் ஏற்றிவிடுவதால் மற்றவர்கள் தானே அதனால் பாதிக்கப்படுகிறார்கள்" என்ற ஒரு வசனம் இருக்கும். அதை கேட்கும் போது எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த வசனம் உண்மைதானே. அந்த சமயத்தில் நான் வேலையை விட்டுவிடலாம் என்றெல்லாம் தோன்றியது. அது போல பல திரைப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து இருந்தார்.மேலும் படிக்க