மேலும் அறிய
Advertisement
Lokesh Kanagaraj: 'என் படத்துல நீங்க நடிக்கணும்’ .. பிரபல நடிகரிடம் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!
லோகேஷ் கனகராஜ், என்னை அழைத்தால் நான் வந்து நடித்து கொடுப்பேன் என நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பட விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய்யை வைத்து படம் எடுத்து புகழ்பெற்ற லோகேஷ் கனகராஜ், என்னை அழைத்தால் நான் வந்து நடித்து கொடுப்பேன் என நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், இந்துஜா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களை தவிர எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். புதிதாக வாங்கும் காரை நிறுத்த முடியாமல் தவிக்கும் பார்க்கிங் பிரச்சனையை கதையாக கொண்டு ’பார்க்கிங்’ படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில் அண்மையில் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீசாக உள்ள நிலையில், இன்று படக்குழுவின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹரீஷ் கல்யாண், இந்துஜா உள்ளிட்ட படக்குழுவுடன் லோகேஷ் கனகராஜூம் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், பார்க்கிங் படத்தில் பிளாக்பஸ்டர் பெறும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், பார்க்கிங் படத்தில் நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த லோகேஷ் கனகராஜ் அது விரைவில் நடைபெறும் என்றார்.
லோகேஷ் கனகராஜின் இந்த பேச்சுக்கு எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள எம்.எஸ். பாஸ்கர், ”எங்கள் அப்பா சிவாஜி அப்பாவின் வெறியன். எங்கள் அண்ணா கமல் அண்ணாவோட ஒரு பக்தன். தம்பி லோகேஷ் கனகராஜ் என்கூட பயணிக்க அவர் ஆசைப்படுவதாக சொன்னார்கள். அது ரொம்ப பெரிய வார்த்தை. எங்கள் அண்ணாவையே இயக்கி விட்ட உங்களுடன் நான் பயணப்படவேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தளபதி விஜய் அவர்களையும் வைத்து நீங்கள் இயக்கியுள்ளீர்கள். நீங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ஆண்டவன் அருளால் பெரும் புகழ் பெற்றவர்கள். நீங்கள் கூப்பிடுங்கள் என்னை. நான் வந்து நடிப்பேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion