Baby Monica: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பேபி மோனிகா.. இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
பேபி மோனிகாவுக்கு (Baby Monica) 2019 ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் “கைதி” படம் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
படிப்பு, நடிப்பு இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால் இந்த பிரேக் எடுத்துள்ளேன் என நடிகை பேபி மோனிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு வீரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி மோனிகா. தொடர்ந்து வேதாளம், பைரவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு 2019 ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் “கைதி” படம் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது. மலையாளத்தில் மம்மூட்டி மகளாக தி பிரைஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில் தன் சினிமா கேரியர் பற்றி பேசியுள்ளார்.
அதில்,”நான் இப்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளேன். அடுத்ததாக நடிக்க வேண்டும் என்றால் கைதி படத்தின் 2 ஆம் பாகத்தில் ஆரம்பிக்கலாம் என நினைத்துள்ளேன். எல்லா கதைகளும் பண்ணுவதை விட தனித்துவமான கதைகளில் நடிக்க வேண்டும் என முயற்சிக்கிறேன். இதற்கு முன்னால் ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்ததாக சொல்கிறார்கள். அதேசமயம் படிப்பு, நடிப்பு இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால் இந்த பிரேக் எடுத்துள்ளேன்.
படிப்பை பொறுத்தவரை நான் சராசரி மாணவியாகவே உள்ளேன். கணக்கு பாடத்தில் ரொம்ப மோசமாக மதிப்பெண் எடுப்பேன். அது ஏன் வரவில்லை என தெரியவில்லை. அதை சரிசெய்ய ரொம்ப முயற்சி எடுக்கிறேன். எங்க அம்மா மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். எனக்கு சினிமா துறையில் ஈர்த்தவர்கள் என்பது இல்லை. ஆனால் எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி என்னை ரோல்மாடலாக 4 பேர் நினைக்க வேண்டுமென நினைக்கிறேன். எது பண்ணினாலும் முழு நம்பிக்கையோடு பண்ண வேண்டும் என நினைப்பேன். எனக்கு 14 வயது தான் ஆகிறது.
படத்தின் கதையெல்லாம் தேர்வு செய்வது அம்மா தான். நானும் கூட இருந்து கதை கேட்பேன். நடிப்பதற்கான வாய்ப்பு, ரீச்சாகும் அளவு எல்லாம் யோசிச்சி தான் முடிவெடுப்போம். படிப்பு, சினிமா இரண்டையும் சமாளிக்க கஷ்டமா தான் இருக்குது. போக போக மிகவும் சிரமப்படத்தான் செய்கிறது. நடிப்பதால் பள்ளியை மிஸ் செய்வதாக தோன்றுகிறது. நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை மிஸ் பண்ணுகிறேன். நான் நடிக்கும்போது மற்றவர்கள் என்னிடம் படத்தில் நடித்தது பற்றி கேட்பார்கள்.
நான் வந்தாலே டில்லி பொண்ணு வருது வழி விடுங்க என சொல்லுவாங்க, ஆட்டோகிராஃப் வாங்குறது என பள்ளியில் நண்பர்கள் கேலி செய்வார்கள். என்னுடைய சப்போர்ட் சிஸ்டம் என சொன்னால் அது அம்மாதான். அவர் இல்லாமல் ஒருநாள் கூட முடியாது. அவரை சார்ந்து தான் முழுக்க முழுக்க இருக்கிறேன். அதில் 0.1 சதவிகிதம் கூட மற்றவர்களுக்கு பங்கு கிடையாது” என மோனிகா தெரிவித்துள்ளார்.