Gun மேனுடன் ஷூட்டிங் வந்த கங்கனா... பயந்துபோன ராகவா லாரன்ஸ்... சந்திரமுகி 2 ஷூட்டிங்ல நடந்தது இதுதான்!
கங்கனா ரனாவத்திடம் குட் மார்னிங் கூட சொல்ல பயப்பட்டதாக இசைவெளியீட்டி விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்காக லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்துள்ளார். வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
ஒரு கோடி நன்கொடை
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் “ஒரே மாதிரி ஆயிடாதனு நிறைய பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க. த்ரிஷா நயனதாரா படங்கள் பண்ணா அத எல்லாரும் பாக்குறீங்க தான. அதே மாதிரி இவங்க ஆடுறதயும் பாருங்க.
இவங்க ஆட்டத்துல கிளாமர் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வலி நிறைய இருக்கு. டிவி.வீடியோல பாக்குற எல்லாரும் இவங்களுக்கு வாய்ப்பு குடுங்க. சுபாஸ்கரன் அண்ணா உங்க மனசு ரொம்ப பெருசு. நீங்க கொடுத்த இந்தப் பணத்துல ஒரு இடம் வாங்கி என்னோட பசங்கள ஆட வைப்பேன். இந்த உலகத்தையே கட்டி போடணும்னா அன்பால மட்டும்தான் முடியும். அந்த அன்பு சுபாஸ்கரன்கிட்ட இருக்கு” என்று அவர் பேசினார்.
கங்கனா குழந்தை மாதிரி
தொடர்ந்து கங்கனா ரனாவத் பற்றி பேசிய ராகவா லாரன்ஸ் “ கங்கனா மேடம் ஷூட்டிங் வரும்போது Gun மேன் கூட தான் வருவாங்க. அவங்க ரொம்ப டஃப் ஆன ஆள்னு சொல்லுவாங்க. குட் மார்னிங் சொல்லக்கூட பயமா இருக்கும்.
ஷூட்டிங் ஹைதராபாத்ல தான் நடக்குது, ஆனால் ஏதோ பாகிஸ்தான் பார்டர்ல நடக்குற மாதிரி இருக்குனு அவங்க கிட்ட சொன்னேன். சிரிச்சுட்டு உடனே கன் மேன எல்லாம் போக சொல்லிட்டாங்க. . அதுக்கு அப்புறம் பழகிப் பார்த்தப்போ தான் தெரிஞ்சது அவங்க குழந்தை மாதிரி” என்று அவர் பேசினார்.