Fathers Day 2023: தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும்.. தங்களது அப்பாக்களை வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்..
தந்தையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் தங்களது தந்தைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள் திரையுலக பிரபலங்கள்
இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு அவரவர் தந்தைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் தமிழ் சினிமா பிரபலங்கள்.
சரத்குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்த மகள்.
”என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வந்த மனிதர். நீங்கள் எங்களுக்காக செய்யும் எல்லாவற்றுக்கும் நன்றி. முக்கியமாக எங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்காகவும் நாங்கள் வீழும்போது எங்களை தூக்கிவிடுவதற்காகவும்.
வாழ்க்கையில் நாம் எத்தனை முறை சரிந்தாலும் முயற்சிகளைக் கைவிடாமல் இருக்கவும், தோல்வி என்பது சகஜமான ஒன்று என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காகவும் நன்றி. தங்க இதயம் கொண்ட என் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்” என உருக்கமாக ரேயான் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், “நீ எப்போதும் என் மீது பொழியும் அன்புக்கும் நன்றி ரே” என நடிகர் சரத்குமாரும் ரேயானின் பதிவில் உருக்கமாக பதிலளித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார்
தனது தந்தையை நினைத்து தான் பெருமை கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஷ்ருதிஹாசன்
தனது தந்தை கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை கொலாஜாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன்.
இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இதுவரை தனது குழந்தையின் முகத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது இல்லை. இன்று தந்தையர் தினத்தன்று தனது குழந்தையுடன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாத சூப்பர்ஸ்டார்களான தந்தைகளுக்கு தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அட்லீ
இயக்குநர் அட்லியின் மனைவியான பிரியா தங்களது குழந்தையுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து உலகத்தின் சிறந்த தந்தை என வாழ்த்தியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ,ஆர், ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த மகன்
ரஹ்மானின் மகன் மற்றும் பாடகராம் ஏ.ஆர் அமீன் தனது தந்தையை வாழ்த்தியுள்ளார். இந்த உலகத்தின் சிறந்த் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். உங்கள் அன்பும் ஆதரவும் தான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய தூன்கள். வா’ ழ்வின் ஒவ்வொரு அடியிலும் என்னை வழி நடத்தியதற்கு நன்றி என தனது தந்தைக்கு வாழ்த்துத் கூறியுள்ளார் அவர்.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தனது குழந்தைகளுடனான புகைப்படங்களை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால், த்ரிஷா, நடிகர் நானி மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியவர்கள் தங்களது தந்தைகளை நினைவுகூர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.