மேலும் அறிய

Captain Miller: அப்பா பெயரை காப்பாத்தணும்.. ஐஸ்வர்யாவை சொல்கிறாரா தனுஷ்? - இணையத்தில் காரசார விவாதம்!

Captain Miller : நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' ப்ரீ ரிலீஸ் விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் சௌந்தர்யா ரஜினிகாந்தையும் சாடியதாக இணையத்தில் செய்திகள் உலா வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நாசர், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பீரியட் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

Captain Miller: அப்பா பெயரை காப்பாத்தணும்.. ஐஸ்வர்யாவை சொல்கிறாரா தனுஷ்? - இணையத்தில் காரசார விவாதம்!

ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் :

சில தினங்களுக்கு முன்னர் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர், பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. இது நடிகர் தனுஷ் நடிக்கும் 49 வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  

Captain Miller: அப்பா பெயரை காப்பாத்தணும்.. ஐஸ்வர்யாவை சொல்கிறாரா தனுஷ்? - இணையத்தில் காரசார விவாதம்!

சிவராஜ்குமார் பற்றி தனுஷ்:

இந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் மேடையில் பேசியது சோசியல் மீடியாவில் தீப்பொறியை பற்ற வைத்துள்ளது. அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தை தாக்கும் விதமாக உள்ளது என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. 

தனுஷ் நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில் " நான் ஏதோ ஒரு வகையில் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்பதை எனக்கு ஒவ்வொரு முறையும் உங்களின் மோட்டிவேஷன் மூலம் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.  

ஒரு சாதாரண மனுஷனா உங்களுடைய அன்புக்கும், பண்புக்கும், மனசுக்கும், பணிவுக்கும், பாசத்துக்கும் நான் என்றுமே ரசிகன். நீங்க மேடையில் பேசி சிரிக்கும் போது அப்படியே உங்களுடைய அப்பாவையும், தம்பியையும் பார்ப்பது போலவே இருந்தது. மூன்று பேரையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பது போல தான் இருந்தது. அப்பா பெயரை எப்படி காப்பாத்தணும் என்பதை உங்களை பார்த்து தான் கத்துக்கணும். என்னோட பசங்க இங்க இருக்காங்க அவங்க உங்களை பார்த்து கத்துப்பாங்க என நினைக்கிறேன். 

நான் வீட்டு சாப்பாடு மிஸ் பண்றேன் என சொன்ன உடனே நம்ம தங்கி இருந்த இடத்துல சின்னதா ஒரு கிச்சன் செட் பண்ணி சமைச்சு கொடுத்ததை நான் மறக்கவே மாட்டேன். இந்த மெமரிஸை நான் என்றுமே என்னுடைய ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன். அனைத்திற்கும் நன்றி" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.
  
கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் : 

தனுஷ் சிவராஜ்குமார் குறித்து பேசியதை நெட்டிசன்கள் வேறு விதமாக சாடி வருகிறார்கள். "அப்பா பெயரை காப்பாத்துறது அவ்வளவு ஈஸி இல்ல. அதை எப்படி காப்பாத்தணும் என்பதை உங்களை பார்த்து தான் கத்துக்கணும்" என தனுஷ் பேசியது மறைமுகமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தை சாடுவது போல தான் இருக்கிறது. சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படம் மூலம் ரஜினியின் பெயரை  கெடுத்து விட்டார் என்றும் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாக உள்ள 'லால் சலாம்' படத்தை பார்த்த ரஜினி மன வருத்தத்தில் இருப்பதாகவும் அதை வைத்து தான் தனுஷ் மேடையில் அப்படி பேசினார் என்றும் கதைக்கட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget