(Source: ECI/ABP News/ABP Majha)
Captain Miller Dhanush:கூர்கொண்ட ஆயுதமாய் காத்திருக்கும் எங்கள் கேப்டன் மில்லர்... தனுஷை வாழ்த்திய இயக்குநர்
1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'கேப்டன் மில்லர்’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து வாழ்த்தியுள்ளனர்.
வரிசைகட்டி நிற்கும் தனுஷ் படங்கள்
’த க்ரே மேன்’ படத்தின் மூலம் ஹாலிவுட் வரை கவனம் ஈர்த்துள்ள தனுஷ் சிறு இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார்.
திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் என அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களின் வரிசையில், சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படம் ’கேப்டன் மில்லர்’.
கேப்டன் மில்லர் கதை
நீண்ட நாள்களாக இப்படத்தின் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், முன்னதாக படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வாழ்த்து
இதுகுறித்து பதிவிட்டுள்ள அருண் மாதேஸ்வரன் ”போர் வரும் நாள் எண்ணி, கூர்கொண்ட ஆயுதமாய் களம் காண காத்திருக்கும் எங்கள் #கேப்டன்மில்லர் தனுஷ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
நடிகர் தனுஷ் 38ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், முன்னதாக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக வாத்தி படத்தின் டீசர், நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன.
அந்த வகையில், தற்போது கேப்டன் மில்லர் படக்குழுவினரும் தங்கள் சார்பாக அப்டேட் கொடுத்துள்ளனர்.