ShahRukhKhan About Vijay : "விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா...?" ஷாரூக்கான் சொன்னது பதில் என்ன..?
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது பற்றி பேசிய கருத்து வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் பிசியாக இருக்கும் ஷாருக்கான் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களுடன் ட்விட்டர் வாயிலாக உரையாடியுள்ளார். சினிமாவில் கோடி கட்டி வரும் பெரிய பிரபலங்கள் ட்விட்டரில் தாமாகவே வந்து ரசிகர்களிடம் பேசி வருகின்றனர். இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ரசிகர்கள் அனைவரும், அவர்களுக்குள் இருக்கும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு வருகின்றனர்.
அந்தவகையில், விஜய்யின் ரசிகர் ஒருவர், "நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா" என்ற கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். இந்த கேள்வியை பார்த்த பாலிவுட் பாட்ஷா, " அவர் மிகவும் கூலான நபர். படங்கள் எப்போது அமையுமோ அப்போதுதான் அமையும். அப்படி அமைய வேண்டும் என்று இருந்தால் நிச்சயமாக அது அமையும்." என அந்த கேள்விக்கு பதில் அளித்தார் .
He is really cool guy…films happen when they happen so…if they have to they will. https://t.co/me3xGJmZoC
— Shah Rukh Khan (@iamsrk) November 5, 2022
முன்னதாக விஜய், ஜவான் படத்தில்கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது. அட்லீ, ஷாருக் கான் மற்றும் விஜய் ஆகியோர் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் ஒன்றாக இருந்துள்ளார். ஆனால், இதைப்பற்றி ட்விட்டரில் எதுவும் ஷாருக் பகிர்ந்துகொள்ளவில்லை. ஒருபக்கம், அட்லீ பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், அவர் தயாரித்த பேரரசு படத்தின் கதையை காப்பி அடுத்துதான் , ஜவான் என்ற கதையை அட்லீ எடுத்து வருகிறார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் வாசக்கு பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை கூடிய விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த சிக்கலில் இருந்து இயக்குநர் அட்லீ மீண்டு வருவார் என ஆவலாக காத்து கொண்டு இருக்கின்றனர்.
View this post on Instagram
சல்மான் கான் - அட்லீ கூட்டணி விரைவில் :
மேலும் பாலிவுட்டின் அதிகமான வசூல் வேட்டையை அள்ளும் சூப்பர் ஸ்டார் நடிகரான சல்மான் கான், இயக்குநர் அட்லீயுடன் இணைந்து பணிபுரிய விருப்பப்படுவதாக பாலிவுட் ஊடங்கள் செய்தி வெளியிடுகிறன்றனர். இது உண்மையெனில் தளபதி 68 படத்தை தெடர்ந்து நடிகர் சல்மான் கான் - அட்லீ இணையும் வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய கோலிவுட் இயக்குநரின் முதல் பாலிவுட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு பாலிவுட்டில் டிமாண்ட் அதிகமாகிவிட்டது.
மேலும் படிக்க : Kamal Hasan Next Movie : மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமலஹாசன்..! 35 ஆண்டுகள் காத்திருப்புக்கு முடிவு..! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...