சன்னி முதல் சோப்ரா வரை...! வெளிநாட்டு காதலரைக் கரம்பிடித்த இந்திய பிரபலங்கள்!
முற்போக்கான மனநிலையைக் கொண்டவர்களுக்குக் கூடத் திருமணம் என்பது வாழ்வின் மிகவும் கடினமான முடிவாக உள்ளது.
முற்போக்கான மனநிலையைக் கொண்டவர்களுக்குக் கூடத் திருமணம் என்பது வாழ்வின் மிகவும் கடினமான முடிவாக உள்ளது. ஏனெனில் இது நாம் எடுக்கும் மிக முக்கியமான மற்றும் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளில் ஒன்றாகும். திருமணம் என்பது வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு உறுதிப்பாடு. இதில் நாடு கடந்து கடல் கடந்து கலாசாரம், பண்பாடு கடந்து வெளிநாட்டவருடன் திருமணம் செய்த பல இந்திய சினிமா ஸ்டார்கள் இருக்கிறார்கள்.
1. ராதிகா ஆப்தே
2012ல் ராதிகா ஆப்தே பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். தனக்குத் திருமண உறவில் நம்பிக்கை இல்லை எனக் கூறி வந்த அவர் பின்னர் பெனடிக்டை மணந்தார். இதுகுறித்துக் கூறியிருந்த அவர்,”எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை.ஆனால் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன்.அதற்கு விசா தடையாக இருந்தது.அதன் காரணமாகவே திருமணம் செய்துகொண்டேன்” என்றார்.
2. ஷ்ரியா சரண்
2018 ஆம் ஆண்டு, நடிகை ஷ்ரியா சரண், ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷீவை மணந்தார். இந்த ஜோடி மாலத்தீவில் டைவிங் செய்யும் போது சந்தித்தது பின்னர் அது காதலாக மலர்ந்தது. இவர்களுக்கு ராதா என்கிற மகள் இருக்கிறாள்.
View this post on Instagram
3. செலினா ஜெட்லி
செலினா ஜெட்லி 2011ல் ஆஸ்திரிய தொழிலதிபர் மற்றும் ஹோட்டல் உரிமையாளரான பீட்டர் ஹாக்கை மணந்தார்.பீட்டர் ஹாக் தனக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
4. ப்ரீத்தி ஜிந்தா
2016 இல், ப்ரீத்தி ஜிந்தா தனது நீண்டகால காதலரான ஜீன் குட்னஃப் என்பவரை மணந்தார். அவர்கள் ஆரம்பத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தனர்.
5. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்
பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனஸும் நீண்ட கால காதலுக்குப் பிறகு 2018 இல் திருமணம் செய்யத் தேர்வு செய்தனர். 2017ல் மெட்காலாவில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர். பிறகு ஒருவருடத்தில் இருவரது திருமணம் நடந்தது.
View this post on Instagram
6. சன்னி லியோன்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன், நீண்டகால பாய்ஃப்ரெண்டான டானியல் வெபரை 2011ல் மணந்தார்.
View this post on Instagram
7. 2018ல், நடிகர் புரப் கோஹ்லி இங்கிலாந்தில் உள்ள தனது காதலியான லூசி பேட்டனை மணந்தார். 6 வயதில் இனியா மற்றும் 3 வயதில் ஓசியன் என அவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர்.