பல நாள் பசிக்கு தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த நடிகையின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.200 கோடி!
அப்பா தொழிலில் ஏமாற்றப்பட்டதைத் தொடந்து நிதி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை வாழ்வதற்கு தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் யார் என்பதை பாப்போம்.

கிட்டி பார்ட்டி என்ற தொலைக்காட்சி தொடர் மூலமாக பிரபலமானவர் தான் இந்த நடிகை. 2002ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடரில் சிறிய ரோலில் நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். அப்போதுதான் அந்த நடிகைக்கு Love Sex Aur Dhokha என்ற படத்தில். லீடூ ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.
இதே போன்று 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த Pyaar Ka Punchnama என்ற ரொமான்ஸ் மற்றும் காமெடி படத்தில் நடித்து பிரபலமானார். இந்தப் படத்தில் கார்த்திக் ஆர்யன், திவ்யந்து சர்மா, இஷிதா ராஜ் சர்மா, நுஷ்ரத் பரூச்சா, சொனாலி செய்ஹல் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.17.5 கோடி வரையில் வசூல் குவித்தது. அதன் பிறகு அவர் தேர்வு செய்து நடித்த எல்லா படங்களுமே ரூ.100 கோடியை எட்டியது. அப்படித்தான் அவர் நடித்த ட்ரீம் கேர்ள் என்ற படம் ரூ.200 கோடி வசூல் குவித்தது.

அப்படி வசூல் ரீதியாக சாதித்த அந்த நடிகை யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை, நுஷ்ரத் பரூச்சா தான். அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது... "கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது நிதி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டேன். ஒருநாளைக்கு 8 ரூபாய் தான் செலவு செய்வேன். கல்லூரியில் இலவசமாக குடிக்க தண்ணீர் இருக்கும், அதை மட்டுமே குடித்து தான் நான் உயிர் வாழ்ந்தேன்.
மாத தொடக்கத்திலேயே அந்த மாதத்தில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிடுவேன். அதன் பிறகு நான் சம்பாதிக்கும் அனைத்தும் சேவிங்ஸ் மற்றும் முதலீட்டிற்கு சென்றுவிடும். என்னுடைய உலகம் ரொம்பவே சிறியது தான். அப்பா தொழில் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்ட பிறகு நான் சம்பாதிப்பதை கவனமாக பார்த்துக் கொள்கிறேன்.

செலவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கிக் கொண்டேன். ஒரு கல்லூரியில் 5 வருடங்கள் படித்தேன். அந்த கல்லூரிக்கு சென்று வருவதற்கு 8 ரூபாய் மட்டுமே செலவிட்டு வந்தேன். எனக்கு பசி ஏற்படும் போது கல்லூரியில் இருக்கும் தண்ணீரை குடித்து தான் நான் உயிர் வாழ்ந்து வந்தேன் என்று கூறியுள்ளார். இப்படியெல்லாம் பொருளாதார பிரச்சனையை எதிர்கொண்ட இவர் தற்போது ரூ.200 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார்.





















