நடிகைகளை வைத்து பாலியல் தொழில்.. மாமா வேலை பார்த்த நடிகை கைது - யார் அவர்?
மும்பையில் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த அனுஷ்கா மோகன் மோனிதாசை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்தவர் அனுஷ்கா மோனி மோகன். 41 வயதான இவர் பாலிவுட் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக குற்றச்சாட்டு போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, இவரை கையும், களவுமாக பிடிக்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ப்ரோக்கர் வேலை பார்த்த பாலிவுட் நடிகை:
அனுஷ்கா மோனிமோனை திரைத்துறையில் மூன்தாஸ் என்றே பலரும் அழைப்பார்கள். இதையடுத்து, போலீசாரே போலியாக வாடிக்கையாளர்களை உருவாக்கி அவரை தொடர்பு கொள்ள வைத்துள்ளனர். இதையடுத்து, மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு மூன்தாஸ் அவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து, முன்னேற்பாடுகளுடன் போலீசார் தங்களது போலி வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீசாரும் அங்கு பதுங்கியிருந்துள்ளனர். அப்போது, அந்த போலி வாடிக்கையாளர்களிடம் நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு தான் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர்களிடம் இருந்து பணமும் பெற்றுள்ளார்.
கைது:
இவையனைத்தையும் மறைந்திருந்து பதிவு செய்த போலீசார் சட்டென்று பணத்துடன் மூன்தாசை பிடித்தனர். பின்னர், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெங்காலி மற்றும் இந்தி திரையுலகில் நடிக்கும் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களிடம் இருந்து இதற்காக லட்சக்கணக்கில் மூன்தாஸ் பணமாக பெற்று சொகுசாக வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், மூன்தாசால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 நடிகைகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
போலீசார் தீவிர நடவடிக்கை:
மூன்தாஸால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மற்ற நடிகைகள் யார்? யார்? இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் திரையுலகத்தில் நடிகைகள் பாலியில் தொழிலில் தள்ளப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது.
பாலிவுட் மட்டுமின்றி மற்ற திரையுலகிலும் பல நடிகைகளை சக நடிகைகளே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாரும் பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





















