8 Years of Premam: 'மலரே நின்னே காணாதிருன்னான்...' மறக்க முடியாத பிரேமம்..! 8 ஆண்டுகளை கடந்தும் நினைவில் நிற்கும் காதல்..!
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இளைஞர்களை ஆட்கொண்ட படம் ப்ரேமம் . ப்ரேமம் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன
கடந்த 2015 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.கொஞ்சம் சினிமாவில் ஆர்வர்ம் இருந்ததது. விடுதி மாணவர்களுக்கு தொலைகாட்சிகள் பார்ப்பதற்கு அதிக நேரம் கிடைக்காததால் வீட்டில் இருந்து வரும் நான் தினமும் வெளியாகும் சினிமா பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டி வந்து நண்பர்களுக்கு சொல்வேன்.
மலர் டீச்சரும், பிரேமமும்:
கேரளாவை சேர்ந்த நண்பன் ஒருவன் என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான் அவனுக்காக மலையாள சினிமாவையும் அவ்வபோது கவணிக்க வேண்டியதாக இருந்தது. அப்படி ஒரு நாள் அவனிடம் நான் சொன்ன தகவல் “ ஏதோ மலையாளப்படம் ப்ரேமம்னு ரொம்ப நல்லா இருக்காம்” இந்தத் தகவலைச் சொன்ன அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக என் வகுப்பில் இருந்த அனைவரும் ப்ரேமம் படத்தின் தீவிர ரசிகர்களாகி இருந்தார்கள். வகுப்புகளில் ஆழுவா பாடல் ரசிகர்களும் மலரே பாடல் ரசிகர்கள் என இரண்டு அணிகள் உருவாகின. ஏனோ எனக்கும் நண்பனுக்கு இரண்டு பாடல்களும் தேவைப்பட்டன.
ப்ரேமம் திரைப்படம் பெரிய முயற்சி எதுவும் இல்லாமல் இளைஞர்களை ஆட்கொண்டது என்று சொல்லலாம். காதலை ஒரு பருவமாக மனதில் உணரச்செய்தது. டீன் ஏஜில் தொடங்கி கல்லூரிப் பருவம் , கல்லூரிக்குப் பிந்தைய வாழ்க்கை என மூன்று காலங்களில் மூன்று காலங்களில் ஒரு ஆணுக்கு ஏற்படு வெவ்வேறு காதல் அனுபவங்களை மனமுறிவுகளை மீண்டும் காதல் மலர்வதை மிக எளிமையான எதார்த்தமான திரைமொழியில் எடுக்கப்பட்டது . நிவின் பாலி, அனுபமா பரமேஷ்வர் , சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என அத்தனை நடிகர்களும் தங்களது எதார்த்தமான நடிப்பால் நம்மை ஈர்த்தார்கள். குறிப்பாக ஒரு தமிழ் டீச்சராக மலர் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் ரசிகர்கள் ப்ரேமம் படத்தை இவ்வளவு ரசித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் எந்த வித உள் நோக்கத்துடனும் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அப்படி செய்யவில்லை. தமிழ் இயக்குனர்களுக்கு மிக நெருக்கமானவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். தமிழில் நேரம் என்கிற் படத்தின் மூலம் அறிமுகமானார்.
8 ஆண்டுகள் நிறைவு:
ப்ரேமம் படத்தின் இவ்வளவுப் பெரிய வெற்றிக்குக் காரணம் அதன் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.ஒரு நல்லப் படம் அந்தப் படத்தின் நடிகர் மட்டுமில்லாமல் அதில் பங்காற்றிய அத்தனைக் கலைஞர்களையும் அடையாளப்படுத்தும்.. ப்ரேமம் படம் அதனை செய்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் மடோனா செபாஸ்டியன்.இன்று அந்தப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று யோசித்துப் பார்க்கும் போது நினைவில் நிற்பது மலர் டீச்சரின் சிரிப்பு, செலின் ரெட் வெல்வேட் கேக் சாப்பிடுவது, பல வண்ணப் பட்டாம்பூச்சிகள், நிரம்ப நிரம்ப காதல்.